11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இளையராஜாவுடன் இணையும் கமல்!

Bookmark and Share

11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இளையராஜாவுடன் இணையும் கமல்!

கமல் ஹாஸன் தனது ராஜ்கமல் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தை 1981-ல் தொடங்கியதிலிருந்து கடந்த 2005-ம் ஆண்டு வரை அவரது சொந்தப் படங்களின் இசையமைப்பாளராக இளையராஜா மட்டும்தான் பணியாற்றினார்.

இடையில் காதலா காதலா படத்துக்கு மட்டும் இளையராஜா மகன் கார்த்திக் ராஜா இசையமைத்தார்.

2005-ம் ஆண்டு வெளியான மும்பை எக்ஸ்பிரஸ் படத்துக்குப் பிறகு கமலின் படங்களுக்கு இசையமைத்தவர்கள் லிஸ்ட்டில் பலர் வந்து போனார்கள். ஆனால் பாடல்கள் பெரிதாக எடுபடவில்லை.

இப்போது 11 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இளையராஜாவுடன் கைகோர்க்கிறார் கமல் ஹாஸன். அதுவும் ஒரு படமல்ல... அடுத்தடுத்து இரு படங்களில் இணையவிருக்கிறார்கள்.

டி.கே. ராஜீவ் குமார் இயக்கும் இந்தப் படத்தில் கமலும் ஷ்ருதி ஹாசனும் நடிக்க உள்ளார்கள். படத்துக்கு தலைப்பு அப்பா அம்மா விளையாட்டு என தலைப்பிட்டுள்ளனர்.

1989-ல் டி.கே. ராஜீவ் குமார் இயக்கத்தில் சாணக்கியன் என்கிற படத்தில் நடித்தார் கமல். இப்போது 26 வருடங்கள் கழித்து மீண்டும் ராஜீவ் குமாருடன் இணைய உள்ளார் கமல். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் படத்தில் கமலுக்கு ஜோடியாக அமலா நடிக்க உள்ளார்.

இதனிடையே கமல் - ராஜீவ் குமாரின் கூட்டணி இன்னொரு படத்திலும் இணைகிறது. இந்தப் படத்தில் கமல் மகளாக ஷ்ருதி ஹாசன் நடிக்க உள்ளார்.

கமலின் எழுத்தில் ராஜீவ் குமாரின் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்துக்கும் இளையராஜா இசையமைக்கிறார். இதுகுறித்த அதிகாரபூர்வத் தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
சுஜா வருணி திருமணத்தை நடத்தி வைக்கும் கமல்
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions