கமல்ஹாசன் கொடுத்த ஒரு பேட்டி- பதிலடி கொடுத்த முதல்வர்

Bookmark and Share

கமல்ஹாசன் கொடுத்த ஒரு பேட்டி- பதிலடி கொடுத்த முதல்வர்

நடிகர் கமல்ஹாசன் அண்மையில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கடந்த தேர்தலில் பொதுமக்கள் வேறு ஒரு தலைமைக்குத்தான் ஓட்டு போட்டார்கள். இன்று அவர் உயிருடன் இல்லாததால் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் சேலத்தில் நடந்த அரசு விழாவில் கலந்துகொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கமலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆட்சி தொடரக்கூடாது என்று கூறும் கமல்ஹாசன் எந்த கிராமத்துக்காவது சென்று மக்களை சந்தித்திருப்பாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் விஸ்வரூபம் படம் வெளியாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உதவி செய்ததாகவும், அந்த நன்றியை கமல்ஹாசன் மறந்து விட்டு பேசுவதாகவும் கூறிய முதல்வர், 65 வயதுக்கு பிறகுதான் அவருக்கு ஞானோதயம் வந்துள்ளதாக கூறினார்.

ஆனால் நடிகர் கமல்ஹாசனுக்கு உண்மையில் வயது 62 தான் ஆகிறது.


Post your comment





Related News
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்
அதல பாதளத்திற்கு போன விஸ்வரூபம்-2 வசூல், கமல்ஹாசன் மார்க்கெட் இப்படியானதே..!
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions