இந்தி நாடகத்தை தயாரிக்கும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்: கமலுக்கு அழைப்பு

Bookmark and Share

இந்தி நாடகத்தை தயாரிக்கும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்: கமலுக்கு அழைப்பு

திரைப்படத் துறையில் பல வெற்றிப் படங்களை தயாரித்து வரும் ‘ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம்’ சமீபத்தில் சில்லு என்ற நாடகத்தை முதல்முறையாக தயாரித்து அரங்கேற்றியது. நவீன அறிவியல் புனைவு நாடமாக அரங்கேறிய ‘சில்லு’ பல்வேறு தரப்பினரையும் கவர்ந்தது. 

இந்நிலையில், ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பிரபல இந்தி பட நட்சத்திரங்களான அனுபம் கெர் - நீனா குப்தா நடிக்க ஒரு இந்தி நாடகத்தை தயாரிக்கவிருக்கிறது. சென்னையில் மியூசிக் அகாடமி அரங்கத்தில் இந்த நாடகம் நடைபெற உள்ளது. ‘மேரா வோ மத்லப் நகிதா’ என்ற இந்த இந்தி நாடகத்தை பார்க்க நடிகர் கமலஹாசன் அவர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது.

அழைப்பிதழை பெற்றுக்கொண்ட கமலஹாசன், ஸ்ரீதேனாண்டாள் எண்டர்டெய்ன்மென்ட் ஹேமா ருக்மணிக்கும் நடிகர்கள் அனுபம் கெர் - நீனா குப்தாவிற்கும் வாழ்த்து தெரிவித்தார். நாடகம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் கூறி அனுப்பினார். இந்த நாடகம் வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணியளவில் நடைபெறவுள்ளது.


Post your comment





Related News
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்
அதல பாதளத்திற்கு போன விஸ்வரூபம்-2 வசூல், கமல்ஹாசன் மார்க்கெட் இப்படியானதே..!
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions