அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக விசாகப்பட்டினத்திற்கு செல்லும் சபாஷ் நாயுடு!

Bookmark and Share

அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக விசாகப்பட்டினத்திற்கு செல்லும் சபாஷ் நாயுடு!

கமல் நடிப்பில் உருவாகிவரும் சபாஷ் நாயுடு படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் கலிபோர்னியாவில் தொடங்கி நடைபெற்றது. முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து சமீபத்தில் சென்னை திரும்பிய கமலுக்கு, அலுவலக படிக்கட்டில் தவறி கீழே விழுந்து காலில் அடிபட்டது.

இதைத்தொடர்ந்து 2 வார காலங்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அவருக்கு, காலில் அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது.

அறுவை சிகிச்சைக்குப்பின்னர் அவரது காலில் ஏற்பட்ட காயம் தற்போது குணமடைந்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது காயம் குணமடைவதற்காக தற்போது பிசியோதெரபி பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறாராம்.

காயம் முழுவதும் குணமடைந்த பிறகு சபாஷ் நாயுடு படப்பிடிப்பில் கமல் கலந்துகொள்ளவிருக்கிறார். இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை விசாகப்பட்டினத்தில் தொடங்க இருக்கின்றனர். இந்த படப்பிடிப்பை செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

இப்படத்தை லைக்கா நிறுவனத்துடன் இணைந்து ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்தில் கமலுடன் ரம்யா கிருஷ்ணன், ஸ்ருதிஹாசன், பிரம்மானந்தம், சௌரப் சுக்லா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகியவற்றில் ஒரே நேரத்தில் உருவாகும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்து வருகிறார். 


Post your comment





Related News
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்
அதல பாதளத்திற்கு போன விஸ்வரூபம்-2 வசூல், கமல்ஹாசன் மார்க்கெட் இப்படியானதே..!
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions