நடிகர் சங்க நிலத்தில் புதிய படத்தை தொடங்கும் கமல்ஹாசன்!

Bookmark and Share

நடிகர் சங்க நிலத்தில் புதிய படத்தை தொடங்கும் கமல்ஹாசன்!

கமல் நடிப்பில் கடைசியாக ‘தூங்காவனம்’ படம் வெளியானது. இப்படத்தை ராஜேஷ் எம்.செல்வா இயக்கியிருந்தார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, மலையாள இயக்குனர் டி.கே.ராஜீவ் குமார் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.

மேலும் இதில் முதன்முறையாக கமலின் மகள் ஸ்ருதி ஹாசனும் இந்தப் படத்தில் அவருடன் சேர்ந்து நடிப்பார் என அறிவிக்கப்பட்டது. 

இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 29ம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த படத்தின் தொடக்க விழாவை நடிகர் சங்க கட்டிடம் இருந்த இடத்தில் நடத்த இருக்கிறார்கள்.

இதுகுறித்து கமல் கூறும்போது, ‘எங்களுடைய ராஜ் கமல் பிலிமின் 41 ஆவது படத்தின் தொடக்கவிழாவை எங்கள் குடும்ப இடமான நடிகர் சங்க மைதானத்தில் நடத்த இருக்கிறோம்’ என்றார்.

நடிகர் சங்க நிலத்தில் விழா நடக்க இருப்பதால் நடிகர் சங்க நிர்வாகிகள் மட்டுமின்றி ஒட்டுமொத்த நடிகர் பட்டாளம் விழாவில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.


Post your comment





Related News
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்
அதல பாதளத்திற்கு போன விஸ்வரூபம்-2 வசூல், கமல்ஹாசன் மார்க்கெட் இப்படியானதே..!
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions