காதல் திருமணம் செய்கிறார் கமல் மகன்..!

Bookmark and Share

காதல் திருமணம் செய்கிறார் கமல் மகன்..!

கமலுக்கு இரண்டு பெண் வாரிசுகள் தானே.. மகன் என யாரும் இல்லையே.. ஒருவேளை மகள் என்பதற்குத்தான் மகன் என சொல்லிவிட்டார்களோ என தவறாக நினைக்கவேண்டாம்.. சொல்ல வந்தது சரியான விஷயத்தை தான்.

துல்கர் சல்மான், நித்யா மேனன் இருவரையும் வைத்து  '100 டேய்ஸ் ஆப் லவ்' படத்தை இயக்குவதன் மூலம் அறிமுக இயக்குனராக களம் இறங்கியுள்ளவர் ஜென்யூஸ் முகம்மது.

இவர் வேறுயாருமல்ல பிரபல மலையாள இயக்குனர் கமலின் மகன் தான். தமிழில் கூட பிரசாந்த், ஷாலினி நடித்த 'பிரியாத வரம் வேண்டும்' படத்தை இயக்கினாரே அவர் தான் இயக்குனர் கமல்.

இன்று '100 டேய்ஸ் ஆப் லவ்' படம் வெளியாகிறது. ஒரு இயக்குனராகும் லட்சியத்தை அடைந்துவிட்ட மகிழ்ச்சியில் இருக்கும் ஜென்யூஸ் முகம்மதுவுக்கு இதைப்போல இன்னொரு மிகப்பெரிய கிப்ட் கிடைக்க இருக்கிறது.

ஆம்.. தனது நீண்ட நாள் தோழியான சல்மாவை காதலித்துவரும் ஜென்யூஸ், வரும் ஏப்ரல்-6ஆம் தேதி அவரை திருமணம் செய்ய இருக்கிறார். இருவரின் குடும்பத்தினருடைய பூரண சம்மத்ததுடன் இந்த திருமணம் நடைபெற இருக்கிறது.

தொழில், வாழ்க்கை இரண்டுமே நினைத்த மாதிரி அமையவிருக்கும் ஜென்யூஸ் முகம்மது உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி தான்.


Post your comment





Related News
கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி
பாதியில் நிறுத்தப்பட்ட இந்தியன் 2 படப்பிடிப்பை விரைவில் துவங்க முடிவு
விஜய் சேதுபதிக்கு சுருதிஹாசன் ஜோடி
இந்தியன் 2 படத்தில் ஆர்யா - இளைஞர் படை மூலம் ஊழலை எதிர்க்கும் கமல்ஹாசன்
ரஜினி, கமலை ஒப்பிடாதீர்கள் - நவாசுதீன் சித்திக்
தைவான் பறக்கும் இந்தியன் 2 படக்குழு
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions