கல்வி, சுகாதாரம், மருத்துவம், போக்குவரத்து சரியில்லை... என் ஆயுசுக்குள் சரி செய்வேன்... கமல்

Bookmark and Share

கல்வி, சுகாதாரம், மருத்துவம், போக்குவரத்து சரியில்லை... என் ஆயுசுக்குள் சரி செய்வேன்... கமல்

தமிழகத்தில் கல்வி, சுகாதாரம், மருத்துவம், போக்குவரத்து ஆகியன சரியில்லை என்றும் இந்தியாவை பெருமையடையச் செய்வேன் என்றும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார். கடந்த சில மாதங்களாக அரசியல் குறித்தும், ஆட்சியாளர்கள் குறித்து கமல் பேசிவந்தார்.

மேலும் தான் அரசியல் கட்சியை தொடங்க போவதாகவும் அவர் அறிவித்தார். எனினும் ஆர்கே நகர் தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு அவர் பதில் அளிக்கவில்லை. அந்த தேர்தலில் போட்டியிடுவோர் குறித்தும் எதையும் பேசவில்லை. ஆர்கே நகர் தேர்தல் முடிந்த பிறகு அங்கு பணம் விளையாடியது குறித்தும் திருடனிடமே பிச்சை எடுக்கும் மக்கள் என்றும் அவர் கூறியிருந்தார்.

ராமேஸ்வரத்தில் இருந்து வரும் பிப்ரவரி 21-ஆம் தேதி அரசியல் கட்சியை தொடங்குவேன் என்று கமல் அறிவித்திருந்தார். மேலும் கலாம் வீட்டிலிருந்து தொடங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், என் ஆயுளுக்குள் இந்தியாவை பெருமையடைய செய்வேன். இந்தியாவின் பயணம் தமிழகத்தில் இருந்து தொடங்கும். 

எனது அரசியல் பயணம் அடுத்த மாதம் தொடங்குகிறது. அப்போது தொடங்க உள்ள பயணத்தில் சகோதரர்கள் கிடைப்பார்கள். 

தமிழகத்தில் கல்வி, சுகாதாரம், மருத்துவம், போக்குவரத்து ஆகியவை சரியாக இல்லை. இவற்றை டிஜிட்டல் முறையில் சரி செய்யவே வந்துள்ளேன். இவ்வாறு கமல் தெரிவித்தார். 


Post your comment





Related News
சத்தியமா அது உண்மை இல்லை, நம்பாதீங்க - ஓவியா புலம்பல்.!
கமல்ஹாசனுக்கு ஆதரவு கொடுங்கள்- நடிகர் விவேக்
ரஜினி, கமலின் அரசியல் குறித்து நடிகர் சத்யராஜின் பேச்சுக்கு பார்த்திபன் பதிலடி
ரஜினியுடனான சந்திப்பு நட்பு ரீதியானது, அரசியல் ரீதியானது இல்லை - கமல்
கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
நடிகர் கமல்ஹாசனின் பிப்ரவரி 21-ஆம் தேதி சுற்றுப்பயண விவரம் வெளியீடு
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிற்கான விருதை பெற்றார் கமல்ஹாசன்
இயல்பான காதாப்பாத்திரங்களில் நடிக்க வேண்டும் நடிகர் ராஜ்கமல்
கமல் அறிவாளி, ஆனால் அரசியலில் ஜெயிப்பாரா? பிக்பாஸ் பிரபலம் கேள்வி
பிக் பாஸ்-2 எப்போது தொடங்கும்? தொகுப்பாளர் யார்? - வெளியான சூப்பர் தகவல்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions