என் பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாட வேண்டாம்: கமல்ஹாசன் வேண்டுகோள்

Bookmark and Share

என் பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாட வேண்டாம்: கமல்ஹாசன் வேண்டுகோள்

கமல்ஹாசன் ‘சபாஷ் நாயுடு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்தது. அங்கு பட வேலைகளை முடித்துவிட்டு சென்னை திரும்பினார். 2 மாதங்களுக்கு முன்பு சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள வீட்டில் மாடியில் இருந்து இறங்கியபோது, படிக்கட்டில் தவறி விழுந்தார். இதில் அவரது கால் எலும்பு முறிந்தது. இதற்காக ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்றார்.

பூரண குணமடைந்த பின்னர் தற்போது வீட்டில் அவர் ஓய்வெடுத்து வருகிறார். விரைவில் விசாகப்பட்டினத்தில் ‘சபாஷ் நாயுடு’ படப்பிடிப்பை மீண்டும் தொடங்க திட்டமிட்டு உள்ளார். இந்தநிலையில் கமல்ஹாசனின் பிறந்தநாளை அடுத்த மாதம் (நவம்பர்) 7-ந் தேதி பிரமாண்டமாக கொண்டாட அவரது ரசிகர்கள் திட்டமிட்டு உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளையும் தீவிரமாக செய்து வருகிறார்கள்.

இந்தநிலையில் தனது பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாட வேண்டாம் என்று நடிகர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்து உள்ளார். இதுகுறித்து அவர் ‘டுவிட்டரில்’ கூறியிருப்பதாவது:-

நற்பணி இயக்க தோழர்களுக்கு கோரிக்கை. தமிழக முதல்-அமைச்சர் உடல்நலம் இவ்வாறு இருக்க, என் பிறந்தநாள் விழாக்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டுகிறேன்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளார்.

இதேபோல, ‘தொடர் சிகிச்சை பெற்று வரும் முதல்-அமைச்சர் விரைவில் பூரண குணமடைய வாழ்த்துகிறேன்’ என்று ‘டுவிட்டரில்’ கமல்ஹாசன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 


Post your comment





Related News
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்
அதல பாதளத்திற்கு போன விஸ்வரூபம்-2 வசூல், கமல்ஹாசன் மார்க்கெட் இப்படியானதே..!
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions