தெர்மாக்கோல் சம்பவத்தை வைத்து தமிழக அரசை சீண்டிய கமல்

Bookmark and Share

தெர்மாக்கோல் சம்பவத்தை வைத்து தமிழக அரசை சீண்டிய கமல்

தெர்மாக்கோல் விவகாரத்தை வைத்து அரசை கேலி செய்துள்ளார் நடிகர் கமல்ஹாசன். 

இயக்குநர் அட்லி தயாரிப்பில் உருவாகியிருக்கும் 'சங்கிலி புங்கிலி கதவத்தொற' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்றார்.

கமல் பேசுகையில், உங்களுக்கு முன்பே இப்படத்தின் டிரைலரை நான் பார்த்துவிட்டேன். இப்போதெல்லாம், யார் முதலில் படத்தை பார்ப்பது என சினிமா ரசிகர்கள் பெருமைக் கொள்கிறார்கள். அதனால்தான் என்னவோ பைரசி அதிகமாக வருகிறது. 

டிரைலரை பார்த்தபோது படம் நன்றாக இருக்கும்போ இருந்தது. இந்த படம் ஆவி வந்த கதை. ஆனால் நல்லபடியாக பண்ணியுள்ளார்கள். வெல் கவர்ட், நாட் வித் தெர்மாகோல். தப்பா சொல்லிட்டேனோ.. ஆவின்னதும் அது உடனே ஞாபகம் வருகிறது என்றார்.

இதனால் அரங்கத்தில் பலத்த கரவொலியும், சிரிப்பலையும் எழுந்தது. தமிழக அமைச்சர் செல்லூர் ராஜு வைகை அணை ஆற்றின் நீரை ஆவியாகமல் இருக்க தெர்மாகோல் மூலம் தடுக்க திட்டம்போட்டு செய்தனர். ஆனால் அந்த திட்டம் வெற்றி அடையவில்லை. 

இந்த நிலையில் பாடல் வெளியீட்டு விழாவில் நடிகர் கமலஹாசன் இவ்வாறு கேலி செய்துள்ளார். ஏற்கனவே அதிமுக அரசை பல சந்தர்ப்பங்களில் விமர்சனம் செய்துள்ளார் கமல். சமீபமாக சில நாட்களாக கருத்து கூறாமல் இருந்து வந்தார். தற்போது தெர்மாக்கோலை வைத்து அரசை கேலி செய்துள்ளார் கமல்ஹாசன்.


Post your comment





Related News
பாரதியாரான கமல்ஹாசன் - வைரலாகும் புகைப்படம் உள்ளே.!
தீபிகாவின் தலை வேண்டும் - உலகநாயகனின் அதிரடி டுவிட்
ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான்: கமல்ஹாசன் டுவிட்டரில் கருத்து
ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கைக்கு நடிகர் கமல்ஹாசன் ரூபாய் இருபது லட்சம் நிதி . .
அடுத்தடுத்து வெளியாகும் கமல்ஹாசனின் 6 படங்கள்
இந்து தீவிரவாதம் குழந்தைகளின் கையில் கத்தியை திணிக்கிறது: டுவிட்டரில் கமல் பதிவு
`விஸ்வரூபம்-2' படத்தின் முக்கிய அப்டேட்
ஆந்திரப் பிரதேச அரசின் என்.டி.ஆர். விருதுக்கு கமல், ரஜினி தேர்வு
இந்தியன்-2 படத்திற்காக ஷங்கர் போடும் பக்கா பிளான் - கசிந்த தகவலால் ரசிகர்கள் கொண்டாட்டம்.!
மேற்கு வங்காள முதல்வர் மம்தா பாணர்ஜியை சந்தித்தார் கமல்ஹாசன்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions