கமல்ஹாசன் புதிய படம் மே 15 ஆரம்பம் ?

Bookmark and Share

கமல்ஹாசன் புதிய படம் மே 15 ஆரம்பம் ?

கமல்ஹாசன் நடித்துள்ள 'உத்தம வில்லன்' படம் மே 1ம் தேதி வெளியாக உள்ளது. இதற்கடுத்து இவர் நடித்துள்ள 'பாபநாசம்' படம் அநேகமாக ஜுலை மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

'விஸ்வரூபம்' படத்தின் முதல் பாகம் எடுத்த போதே, அதன் இரண்டாவது பாகத்தையும் கமல் படமாக்கியிருந்தார். அதன் சில காட்சிகளைப் படமாக்கினால்தான் இரண்டாவது பாகம் வெளிவரும்.

ஆனால், படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கும், கமல்ஹாசனுக்கும் இடையே உள்ள பிரச்சனையால் அந்த சில காட்சிகளின் படப்பிடிப்பு எப்போது நடைபெறும் என்று தெரியாது.

இப்போதைக்கோ, இந்த ஆண்டோ, அல்லது இனிமேலோ 'விஸ்வரூபம் 2' படம் வெளிவருவது அதன் தயாரிப்பாளர் கையில்தான் உள்ளது. எனவே, தனது அடுத்த பட வேலைகளில் கமல்ஹாசன் ஏற்கெனவே இறங்கிவிட்டார்.

அதற்கு 'ஓர் இரவு' என்று தலைப்பு வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. த்ரிஷா இந்தப் படத்தில் நாயகியாக நடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தை கமல்ஹாசனின் உதவியாளர் ராஜேஷ் இயக்க உள்ளார்.

இந்தப் படத்தின் மொத்தப் படப்பிடிப்பும் மொரீஷியஸ் தீவில் நடைபெற உள்ளதாகத் தெரிகிறது. இதற்காக சில வாரங்களுக்கு முன்பே கமல்ஹாசன் அங்கு சென்று லொகேஷன்களைத் தேர்வு செய்துவிட்டார் என்கிறார்கள்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பை மே 15ம் தேதியிலிருந்து கமல்ஹாசன் ஆரம்பிக்க உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.


Post your comment





Related News
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா
கமலுக்கு பேரனாகும் சிம்பு
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?
நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும் - ரஜினிக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions