தோழனே, நண்பனே, ஆசானே, மூடபக்தனே... எப்பிழை செய்தேன் நான்?- கமல் ஹாஸன்

Bookmark and Share

தோழனே, நண்பனே, ஆசானே, மூடபக்தனே... எப்பிழை செய்தேன் நான்?- கமல் ஹாஸன்

மாணவர்களின் போராட்டத்துக்கு துணை நின்ற தன்னை அரசியலுக்கு வரச் சொல்லலாமா.. என்ன பிழை செய்தேன் நான்? என்று கேள்வி எழுப்பியுள்ளார் நடிகர் கமல் ஹாஸன். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சமீபத்தில் நடந்த மாணவர்களின் தன்னெழுச்சி போராட்டத்துக்கு நடிகர் கமல்ஹாசன் தாமாக முன்வந்து ஆதரவு அளித்தார். போராட்டம் நடந்த போது, மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமான பதிவுகளை தனது சுட்டுரையில் பதிவிட்டு வந்தார்.

போராட்டம் முடிவடைந்த பின்னர், செய்தியாளர்களை சந்தித்து தனது நிலைப்பாட்டை தெரிவித்தார். போலீஸ் தடியடியை ஓரளவுக்கு கண்டிக்கவும் செய்தார். இதைத் தொடர்ந்து அவரை சமூக வலைதளங்கள் வாயிலாக பலர் அரசியலுக்கு வரச் சொல்வது போன்ற பதிவுகள் இடம் பெற்று வருகின்றன.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டரில், ""கேள்... தோழனே, நண்பனே, ஆசானே, மூடபக்தனே. உன்னுடன் நிற்கத்துணிந்த எனை அரசியல் தலைவருடனா சேரச் சொல்வாய்?. எப்பிழை செய்தேன் இவ்விகழ்வெனைச்சேர? நொந்தேனடா..." என்று தெரிவித்துள்ளார். 

ஆமா... அரசியல் அவ்ளோ பெரிய்ய தப்பா கமல் சார்?


Post your comment





Related News
வாணி கணபதி கர்ப்பத்தை திட்டமிட்டு கலைத்தாரா கமல்- ஆளுங்கட்சி பத்திரிக்கை செய்த வேலை
டி 16 பட இயக்குனரை பிளாக் செய்த சு. சாமி: அதுக்குள்ள பயந்தா எப்படி என நரேன் கிண்டல்
வேதாளம் படத்தில் வாங்கிய திட்டிற்கு அதிரடி பதில் அளித்த ஸ்ருதிஹாசன்
தயாரிப்பாளரால் விபச்சாரத்தில் தள்ளப்பட்டு எய்ட்ஸால் இறந்த கமல், ரஜினி ஹீரோயின்: பிளாஷ்பேக்
என்னை பேசவைக்கிறார்கள், பொறுக்கமுடியவில்லை! கமல்ஹாசன் கொதிப்பு
அந்த கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறார் கமல்ஹாசன்! தசவதாரம் பாணியில் கலாய்த்த கரு.பழனியப்பன்
அவர்கள் தைரியம் இல்லாதவர்கள்- ஸ்ருதி விளாசல்
சசிகலா நரியாம், ஓ.பி.எஸ் ஓநாயாம்! அய்யோ அது நான் இல்ல. கமல் கதறல்
சூர்யா, கமல் எதற்கு சொல்ல வேண்டும், ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தது என் தவறா? அமீர் ஓபன் டாக்
கமலுக்கு முதுகெலும்பு இல்லை உங்களுக்கு மூளையில்லையா?: சு. சாமியை விளாசும் ரசிகர்கள்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions