தேர்தல் நாளில் படப்பிடிப்பு தொடங்கும் கமல்!

Bookmark and Share

தேர்தல் நாளில் படப்பிடிப்பு தொடங்கும் கமல்!

டி.கே.ராஜீவ்குமார் இயக்கத்தில் கமல் நடிக்கவிருக்கும் ‘சபாஷ் நாயுடு’ படத்தின் பூஜை இன்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த பூஜைக்கு பிறகு கமல் செய்தியாளர்களிடம் பேசும்போது, இப்படத்தின் படப்பிடிப்பை வருகிற மே மாதம் 16-ந் தேதி லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் நடத்தவுள்ளோம்.

ஜுன் இறுதியில் அங்கு படப்பிடிப்பை முடித்துவிட்டு இங்கு வருகிறோம். மீதம் இருக்கிற காட்சிகளை ஜுலையில் இங்கு தொடங்கி முடிக்கவுள்ளோம். இப்படத்தில் 4 பாடல்கள் இடம்பெறுகிறது. ஸ்ருதி இப்படத்தில் என்னுடைய மகளாக நடிக்கவிருக்கிறார். இப்படம் காமெடி திரில்லராக உருவாகவிருக்கிறது என்றார்.

இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கவிருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் இப்படம் உருவாகிறது. ரம்யா கிருஷ்ணன், பிரம்மானந்தம் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமும், லைக்கா நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது.


Post your comment





Related News
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்
அதல பாதளத்திற்கு போன விஸ்வரூபம்-2 வசூல், கமல்ஹாசன் மார்க்கெட் இப்படியானதே..!
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions