கமல் படத்தில் மீண்டும் நடிக்க விரும்பும் அபிராமி!

Bookmark and Share

கமல் படத்தில் மீண்டும் நடிக்க விரும்பும் அபிராமி!

கமல் நடித்த 'விருமாண்டி' படத்தில் அவருடன் நடித்தவர் அபிராமி. அதற்கு முன்பு வரை கோடு போட்டு நடித்து வந்த அவர், அந்த படத்தில் கமலுடன் தாண்ணீருக்குள் கட்டிக்கலந்தாடி ரொமான்ஸ் செய்தார்.

ஆனால் அதன்பிறகு பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அபிராமி, பின்னர் தனது காதலரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலாகி விட்டார்.

ஆனால், அப்படி சென்றவரை பல வருடங்களுக்குப்பிறகு மீண்டும் தனது உத்தமவில்லன் படத்தில் டப்பிங் பேசுவதற்காக கமலே கோலிவுட்டுக்கு அழைத்து வந்தார். அப்படி வந்த அபிராமியை, ஜோதிகா நடித்த 36 வயதினிலே படத்தில் நடிக்க வைத்தனர்.

அப்படத்தில் கவனிக்கப்படும் கேரக்டரில் நடித்த அபிராமி இப்போது மேலும் சில டைரக்டர்களின் கவனத்துக்கும் வந்து விட்டார். இந்த நிலையில், தற்போது கமல் தூங்காவனம் படத்தில் நடிக்கும் செய்திகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அந்த படத்தில் தனக்கு ஒரு நல்ல கேரக்டர் தருமாறு கமலிடம் கேட்டிருக்கிறாராம் அபிராமி.

ஆனால் அதற்கு இன்னும் கமல் பதில் கொடுக்கவில்லை என்றபோதும் நம்பிக்கையுடன் காத்திருக்கும் அபிராமி, அப்படி கமல் படத்தில் சான்ஸ் கிடைத்தால் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இன்னும் பெரிய அளவில் பிரபலமாகி விடலாம் என்றும் நினைக்கிறாராம்.


Post your comment





Related News
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
அதல பாதளத்திற்கு போன விஸ்வரூபம்-2 வசூல், கமல்ஹாசன் மார்க்கெட் இப்படியானதே..!
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions