கமல்ஹாசனும், திரைப்பட ஜோசியமும்...!

Bookmark and Share

கமல்ஹாசனும்,  திரைப்பட ஜோசியமும்...!

கமல்ஹாசனின் படங்களைப் பற்றி ஏற்கெனவே சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்களால் சில விஷயங்கள் பகிரப்பட்டு வருகின்றன. அதில் ஆச்சரியப்படும் விஷயத்தில் ஒரு தகவல் அதிகமாகவே விவாதிக்கப்பட்ட ஒன்றாக இருந்தது.

சில முக்கியப் பிரச்னைகளைப் பற்றி  கமல்ஹாசன் படங்களில் இருந்த விஷயம்தான் அது. 'அன்பே சிவம்' படத்தில் கமல்ஹாசன் சுனாமியைப் பற்றிக் கூறியிருப்பார். அந்தப் படம் 2003ம் ஆண்டு வெளிவந்த ஒரு படம்.

அதன் பின் 2004ம் ஆண்டு இந்தியாவில் சுனாமியால் மிகப் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. அடுத்து, 'எபோலா' போன்ற வியாதியைப் பற்றி 'தசாவதாரம்' படத்தில் கூறியிருந்தார். அந்தப் படம் 2008ம் ஆண்டு வெளிவந்தது.

அதன் பின் 2014ம் ஆண்டு 'எபோலா' நோயால் ஆப்பிரிக்க நாடுகளில் மிகப் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. அதே போல 'விஸ்வரூபம்' படத்திற்காக அமெரிக்க தூதரகத்தில் பிப்ரவரி மாதம் அனுமதி கேட்டிருந்தார்.

ஆனால் கமலுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதன் பின் மே மாதம் பின்லேடன் அமெரிக்க ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டான். இப்படி உலகில் நடந்த சில முக்கிய நிகழ்வுகளை தன்னுடைய படங்களில் முன்னமே கமல்ஹாசன் வைத்திருந்ததைப் பற்றி அவரே சமீபத்திய பேட்டி ஒன்றில் ஆச்சரியத்துடன் தெரிவித்திருக்கிறார்.


Post your comment





Related News
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
சுஜா வருணி திருமணத்தை நடத்தி வைக்கும் கமல்
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions