தூக்கத்தை இழந்த லிங்குசாமிக்கு தூங்காவனம்

Bookmark and Share

தூக்கத்தை இழந்த லிங்குசாமிக்கு தூங்காவனம்

உத்தம வில்லன் என்ற ஒரே ஒரு படத்தைத் தயாரித்த காரணத்தால் நிம்மதியை இழந்து, தூக்கத்தையும் இழந்து தவிக்கும் தயாரிப்பாளரும், இயக்குனருமான லிங்குசாமிக்கு கமல்ஹாசன் தற்போது எடுத்துள்ளதாகச் சொல்லப்படும் முடிவு மிகப் பெரிய ஆறுதலைத் தரும்.

உத்தம வில்லன் படத்தில் நாயகனாக நடித்த கமல்ஹாசன், படத்தை முதல் பிரதி அடிப்படையிலும் தயாரித்துக் கொடுத்தார். கேட்ட போதெல்லாம் எந்தப் பேச்சையும் பேசாமல் பணத்தைக் கொடுத்துள்ளார்கள் லிங்குசாமி பிரதர்ஸ்.

படம் முடிந்து வெளிவருவதற்கு முன்பு வரை கமல்ஹாசன் என்ன எடுத்திருக்கிறார் என்று அவர்களுக்குத் தெரியவே தெரியாது.தணிக்கையில் படத்தைப் பார்த்தவர்கள்தான் அவருக்கே படத்தைப் பற்றித் தெரிவித்திருக்கிறார்கள்.

அந்த அளவிற்கு கமல்ஹாசன் மீது நம்பிக்கை வைத்து எதையுமே கேட்காமல் இருந்திருக்கிறார்கள். அந்த கேள்வி கேட்காத குணத்திற்காகவே உத்தம வில்லன் படம் மூலம் நஷ்டமடைந்த லிங்குசாமி நிறுவனத்திற்கு தற்போது தான் தயாரித்து நடித்துள்ள தூங்காவனம் படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையைக் கொடுக்க கமல்ஹாசன் முன்வந்துள்ளாராம்.

ஏற்கெனவே, நடந்த பஞ்சாயத்துப்படி கமல்ஹாசன் அடுத்ததாக லிங்குசாமிக்கு ஒரு படத்தில் நடித்துக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டிருந்தது.

அதை இப்போதே கொடுக்க கமல்ஹாசன் தயாராக உள்ளாராம். அப்படி மட்டும் நடந்தால் கமர்ஷியல் படமாக எடுக்கப்பட்டு வரும் தூங்காவனம் லிங்குசாமியை தூக்கிவிடும் என்பது மட்டும் உறுதி.


Post your comment





Related News
5 வருடங்களில் கயல் ஆனந்திக்கு இது முதல்முறை
சினிமாவில் நடிக்க காதல் திருமணத்தை நிறுத்திய நடிகை
பிரியா ஆனந்த் மலையாளத்தில் கவனம் செலுத்த இதுதான் காரணமா?
மாமியாராக மாறிய தேவயானி
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
எனக்கு அந்த நிலைமைகள் இதுவரை ஏற்படவில்லை - ஆண்ட்ரியா
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions