சகோதரர் எப்படி இருக்கவேண்டும் என்று கற்றுக்கொடுத்தவர் சந்திரஹாசன்: இரங்கல் கூட்டத்தில் கமல் உருக்கமான பேச்சு

Bookmark and Share

சகோதரர் எப்படி இருக்கவேண்டும் என்று கற்றுக்கொடுத்தவர் சந்திரஹாசன்: இரங்கல் கூட்டத்தில் கமல் உருக்கமான பேச்சு

நடிகர் கமல்ஹாசனின் சகோதரரும், வக்கீலுமான சந்திரஹாசன் கடந்த மாதம் மார்ச் 19-ந் தேதி லண்டனில் உள்ள தனது மகள் அனுஹாசன் வீட்டில் காலமானார். இந்நிலையில், சந்திரஹாசனின் மறைவுக்கு நேற்று சென்னை காமராஜர் அரங்கத்தில் நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது. 

இதில், கமல், ரஜினிகாந்த், சாருஹாசன், அனுஹாசன், அக்ஷராஹாசன், சுஹாசினி, ராம்குமார், கே.எஸ்.ரவிக்குமார், கிரேஸி மோகன், மௌலி, பிரமிட் நடராஜன், லிசி, அம்பிகா, ரோகிணி, புஷ்பா கந்தசாமி உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பங்கேற்றனர்.

அப்போது கமல் பேசும்போது, என்னுடைய நினைவுக்கு தெரிந்து சந்திரஹாசனின் அறிவுரை இல்லாமல் நான் கலந்துகொள்ளும் முதல் நிகழ்ச்சி இதுவாகத்தான் இருக்கும். இதை நான் இரங்கல் கூட்டமாக நினைக்கவில்லை, ஒரு விழாவாகத்தான் நினைக்கிறேன். மூன்றரை வயதில் நான் சினிமாவுக்கு வந்தேன். எனது அண்ணன்தான் எனக்கு பலம். சகோதரர் எப்படி இருக்கவேண்டும் என்று எனக்கு கற்றுக் கொடுத்தவர் சந்திரஹாசன். ஒரு சகோதரனாக இருப்பதுகூட பெரிய பொறுப்புதான்.

சந்திரஹாசன் யாரையும் சத்தமாக அழைக்கமாட்டார். சுருக்கமாகவும், அதை நேரத்தில் மரியாதையாகவும் பேசுவார். பிச்சைக்காரர்களைக்கூட ஒருமையில் பேசியது கிடையாது. அந்தளவுக்கு மரியாதையானவர். அவரிடமிருந்துதான் நானும் மரியாதையை கற்றுக்கொண்டேன். 

ஸ்டார் ஹோட்டலில் தங்கமாட்டார், அவருடைய துணியை அவரேதான் துவைத்துக் கொள்வார். அந்தளவுக்கு எளிமையானவர். அவரிடம் நான் கற்றுக் கொண்டது ஏராளம். என்னுடைய சோம்பேறித்தனத்தால் நிறைய கற்றுக்கொள்ளாமல் இருந்துவிட்டேன். இனி அதை பின்பற்ற முயற்சி செய்கிறேன். 


அண்ணன் இல்லாத வாழ்க்கை எனக்கு கஷ்டமாகத்தான் இருக்கிறது. இருந்தாலும், அதை தாங்குவதற்கான பயிற்சியை எனக்கு கொடுத்துவிட்டு சென்றுள்ளார். பிறப்பு, இறப்பு என்பது அனைவருக்கும் உண்டு. ஆனால், எப்படி இருந்தோம், மற்றவர்கள் சொல்லும்படி எப்படி வாழ்ந்து காட்டினோம் என்பதுதான் பெரிய விஷயம். என்னால் அதையெல்லாம் செய்யமுடிகிறதா? என்று பார்ப்போம்.


சந்திரஹாசன் என்றும் எனது நிழலாக இருப்பார் என்று நினைத்தேன். ஆனால், இயற்கை அவரை எடுத்துக்கொண்டது. இருந்தாலும், என்னுள் ஒரு பாகமாக அவர் கலந்துவிட்டார். சந்திரஹாசனின் குரல் எனக்குள் ஒலித்துக் கொண்டிருக்கும். அதுதான் என்னை வழிநடத்தும். 


இவ்வாறு அவர் பேசினார்.


Post your comment





Related News
இந்தியன்-2, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களை கவர கமல் திட்டம்
மக்களை பிளவுபடுத்தும் வகையில் எது வந்தாலும் தகர்த்து எறிவோம்: கமல்ஹாசன் ஆவேச பேச்சு
புதிய ஆட்சி அமைந்தவுடன் கர்நாடக முதல்வரை சந்திப்போம் - கமல்ஹாசன்
பிக்பாஸ் 2 - பட்டியலில் இடம்பிடித்துள்ள பிரபலங்கள்
கமல் கட்சியில் சேர ஜுலி முயற்சி
நம்மவரா? தலைவரா? பொது மேடையில் சிம்புவின் பளிச் பதில் - அதிர்ந்த அரங்கம்.!
பிக் பாஸ் அடுத்த சீசனுக்கு தயாரான கமல் - போட்டியாளர்கள் பற்றிய முக்கிய தகவல் இதோ.!
பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் மீண்டும் கமல்ஹாசன்
எம்.எஸ்.ராஜேஸ்வரி மறைவு - நடிகர் கமல்ஹாசன் இரங்கல்
உலகநாயகன் கமல்ஹாசன் கட்சியில் இணைந்த புதுவை மக்கள்...!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions