பிறர் படங்களுக்கும் உதவும் கமல்!

Bookmark and Share

பிறர் படங்களுக்கும் உதவும் கமல்!

சமீபத்திய ஆண்டுகளில் கமலிடம் பெரிய அளவில் மாற்றம் தெரிகிறது. முன்பெல்லாம் ஊடகங்களை பெரிதாக கண்டு கொள்ள மாட்டார். தேவைப்பட்டால் வலிய துரத்திப் பிடித்தால் மட்டுமே பேசுவார்.

இப்போது நல்லது கெட்து எந்த விஷயமாக  இருந்தாலும் ஊடகங்களிடம்தான் முதலில் அழைத்து பகிர்ந்து கொள்கிறார். K வாய்மொழி என்கிற தளத்தில் அன்றாடம் எதுவும் சொல்ல வேண்டியிருந்தால் பேசுகிறார்.

அது மட்டுமல்ல படத்துக்கு முன்பும் பின்பும் நன்றாக ஊடக ஒத்துழைப்பும் தருகிறார். தன்பட விழாக்களுக்கும் ப்ரமொஷன்களுக்கும் தவறாமல் வந்து பங்களிப்பார்.

இந்த விஷயத்தில் தன் படத்துக்கு மட்டும் என்கிற சுயநலத்துடன் இருப்பதில்லை, நம்பிக்கை தரும் இளையதலைமுறைக் கலைஞர்களின் படங்களின் விழாக்களுக்கு வருவது ,ஊக்கப் படுத்துவது என்று தொடர்ந்து வருகிறார். தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியின் நட்புக்காக ஜீவா நடித்த அரண் படத்தில் வர்ணனைக்குரல் கூட கொடுத்திருக்கிறார்.

பட்ஜெட் சிறியதாயினும் புதிய முயற்சியாக இருந்ததால் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் இளைஞர்களை ஊக்கப்படுத்த அந்த குழுவினருக்கு கமல் கொடுத்த ஊக்கமும் விளம்பரமும் படத்துக்கும் பெரிய பலம் சேர்த்தது. சிறுவர் படமுயற்சி என்பதால் பசங்க படத்துக்கு இப்படி உதவினார்.

சீரியசான முயற்சி என்பதால் ராமின் தரமணி  படத்துக்கு வந்து வாழ்த்தி பேசினார். தயாரிப்பாளர் நண்பர் எச். முரளியின் நட்புக்காக   வாலிப ராஜா வுக்கு வந்து ஊக்கப் படுத்தி வாழ்த்தினார்.

நட்புக்காக நடிகர் ஜெயராமின் மகனை ஒரு பக்கக் கதை அறிமுக விழாவில் வந்து வாழ்த்தினார். அண்மையில் இளைஞர்களுக்கா அவம் படத்தில் காரிருளே பாடலைப்பாடிக் கொடுத்திருக்கிறார்.

ஊடகங்கள் செய்யும் கிசுகிசு பாணி ஊகங்களைக்கூட நேரில் பார்க்கும் போது வேடிக்கையாக எடுத்துக் கொண்டு சகஜமாகி விடுகிறார்.  இடையிடையே இலக்கிய விழாக்கள், நண்பர்கள் தொடர்புபைய நல்ல விழாக்கள், துக்க நிகழ்ச்சிகளில் கூட தவறாமல் ஆஜராகி விடுவார்.

மூன்று படங்களில் நடித்துக் கொண்டு இருக்கும் போதே இவ்வளவையும் செய்கிறார் கமல். சில நடிகர் நடிகைகள் தங்கள் படவிழாக்களுக்கே வருவதில்லை. தான் ஒரு பொறுப்புள்ள மூத்த கலைஞனாக கமல் தன் பங்களிப்பை வழங்கத் தவறுவதே இல்லை. அவ்வப்போது திறமைசாலிகளை பாராட்டவும் தவறுவதில்லை.


Post your comment

Related News
கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி
பாதியில் நிறுத்தப்பட்ட இந்தியன் 2 படப்பிடிப்பை விரைவில் துவங்க முடிவு
இந்தியன் 2 படத்தில் ஆர்யா - இளைஞர் படை மூலம் ஊழலை எதிர்க்கும் கமல்ஹாசன்
ரஜினி, கமலை ஒப்பிடாதீர்கள் - நவாசுதீன் சித்திக்
தைவான் பறக்கும் இந்தியன் 2 படக்குழு
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா
கமலுக்கு பேரனாகும் சிம்பு
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions