புதிய திட்டங்களை செயல்படுத்த போகிறோம்: ரசிகர்கள் முன்பு கமல்ஹாசன் பேச்சு

Bookmark and Share

புதிய திட்டங்களை செயல்படுத்த போகிறோம்: ரசிகர்கள் முன்பு கமல்ஹாசன் பேச்சு

நடிகர் கமல்ஹாசன் அடுத்த மாதம் (பிப்ரவரி) 21-ந்தேதி தனிக் கட்சி தொடங்கி அரசியல் சுற்றுப்பயணத்தை தொடங்கப் போவதாக அறிவித்து இருக்கிறார். ராமேசுவரத்தில் உள்ள மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாம் வீட்டில் இருந்து இந்த பயணத்தை தொடங்குகிறார்.

இதற்காக ராமநாதபுரத்தில் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தில் ரசிகர்கள் கலந்து கொள்கிறார்கள். இதில் கமல்ஹாசன் கட்சி பெயரை அறிவிக்கிறார். கொடி, சின்னத்தையும் வெளியிடுகிறார். தனது கட்சியின் கொள்கை திட்டங்களையும் அவர் விளக்கி பேசுகிறார்.

அதன்பிறகு மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்கிறார். நகரம், கிராமம் என்று திறந்த வேனில் தெருதெருவாக சென்று பொதுமக்களையும் ரசிகர்களையும் சந்திக்கிறார். முக்கிய பகுதிகளில் மேடைகளில் ஏறி பேசுகிறார். சுற்றுப்பயணத்தில் கட்சியின் கொள்கை திட்டங்கள் பற்றி பிரசாரம் செய்கிறார்.

சுற்றுப்பயண ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்க சென்னையில் ரசிகர்களை கமல்ஹாசன் சந்தித்தார். ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசன் அலுவலகத்தில் இந்த கூட்டம் நடந்தது. இதில் ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த ரசிகர் மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ரசிகர்கள் மத்தியில் கமல்ஹாசன் பேசியதாவது:-

“நமது நற்பணி இயக்கத்தின் வீச்சு இன்னும் அதிகமாகப் போகிறது. இது தற்போது மக்களை நோக்கி செல்லப் போகிறது. நீங்கள் நற்பணியின் நாயகர்கள். இதில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறீர்கள். தற்போது இந்த நற்பணி இயக்கத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி செல்லும் நேரமும், கடமையும் எனக்கு வந்திருக்கிறது.

இது இப்போதைய அவசிய தேவை, இந்த நிலைக்கு நாம் தள்ளப்பட்டு இருக்கிறோம். எனவே உங்கள் பலத்துடன் இதனை செய்ய நான் ஆசைப்படுகிறேன். இத்தனை வருடங்களாக என்னுடன் இருந்திருக்கிறீர்கள். நீங்கள் எனது மூத்த சகோதரர்கள். இனியும் நிறைய சகோதரர்கள் நம்முடன் இணையப் போகிறார்கள்.

‘மூத்தவர்’ என்ற கண்ணியத்தை நீங்கள் காக்க வேண்டும். வருபவர்களை நாம் வரவேற்று, அரவணைத்து நம்முடன் வழிநடத்தி செல்லவேண்டும். அது உங்கள் கடமையும் கூட. இப்போது நான் போவது ராமநாதபுரமாக இருந்தாலும், சொல்வது உங்களிடம் தான். யாதும் ஊரே யாவரும் கேளிர்.

நான் பார்க்கப்போவது நம் குடும்பத்தின் ஒரு பகுதியைதான். அங்கேயும் செல்வேன். இங்கேயும் நிறைய வேலை இருக்கிறது. அது வேற்று ஊர் வேலை, நமக்கு சம்பந்தம் இல்லையே என்று நினைக்க வேண்டாம். எல்லாமே நம் வேலை தான். இன்று நாம் செய்யப்போகும் நற்பணிகள், முன்பு இருந்ததை விட பன்மடங்காகவும், முன்பிருந்தது போலவே முன்னுதாரணமாகவும் திகழும்.

அதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு விட்டன. அதை செயல்படுத்தப் போகிறோம். நம் பாதை, இலக்கு எப்படிபட்டதாக இருக்கும் என்பதின் முன்னுதாரணமே, அடுத்த மாதம் நாம் மேற்கொள்ள இருக்கும் பயணம்.

இங்கு ஒரு புரளி இருப்பதாக கேள்விப்பட்டேன். 24-ந் தேதி மதுரையில் பொதுக்கூட்டம் இருப்பது போல ஏதேதோ சொல்கிறார்கள். அப்படி எதுவும் இல்லை. 21-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை மட்டுமே நாம் பயணம் மேற்கொள்ள இருக்கிறோம். அந்த இடங்களின் பெயர்களும், அதற்கான நேரங்களும் அறிவிக்கப்படும்.”

இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

அலுவலகம் எதிரில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டு நின்று ‘வருங்கால முதல்வர் கமல்ஹாசன் வாழ்க’ என்று கோஷமிட்டபடி இருந்தனர். கமல்ஹாசன் கட் அவுட் பேனர்களுக்கு பால் அபிஷேகமும் செய்தனர். ரசிகர்கள் சந்திப்பை தொடர்ந்து கமல்ஹாசன் அலுவலகத்தை சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


Post your comment

Related News
மேடையில் பரணி செய்த செயல், கடுமையாக திட்டிய கமல் - என்ன நடந்தது?
மேட்டர் இருக்கா? கமல்ஹாசன் கட்சியை கொச்சையாக பேசிய பிரபலம் - வச்சு செய்யும் நெட்டிசன்கள்.!
உலக நாயகன் கமல்ஹாசனுக்கு குவியும் பாராட்டுக்கள்.!
இந்தியன்-2 படத்தில் பிரபல முன்னணி நடிகர் - ஷங்கரின் பலே திட்டம்.!
ஏப்ரல் 4-ல் அடுத்த பொது கூட்டம் கமல் அதிரடி அறிவிப்பு - எங்கே தெரியுமா?
கமல் அரசியல் கட்சி கொடியில் ஒளிந்திருக்கும் முக்கிய ரகசியம் !
கமலுக்கு வாழ்த்து தெரிவித்த முன்னணி பிரபலங்கள் - யார் யாருனு பாருங்க.!
கட்சியின் பெயரை அறிவித்தார் கமல்ஹாசன் - உற்சாகத்தில் ரசிகர்கள்.!
சத்தியமா அது உண்மை இல்லை, நம்பாதீங்க - ஓவியா புலம்பல்.!
கமல்ஹாசனுக்கு ஆதரவு கொடுங்கள்- நடிகர் விவேக்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions