14 ஆண்டுகளுக்குப் பிறகு கமல் உடன் ஜோடி சேரும் நடிகை

Bookmark and Share

14 ஆண்டுகளுக்குப் பிறகு கமல் உடன் ஜோடி  சேரும் நடிகை

கமல் தன்னுடைய அடுத்தபடத்துக்காகத் தயாராகிக்கொண்டிருக்கிறார். மலையாளஇயக்குநர் டி.கே.சஞ்சீவ்குமார் இயக்கவிருக்கிறார்.

முழுக்க அமெரிக்காவிலேயே படமாக்கப்படவிருக்கும் அந்தப்படத்தில் முதன்முறையாக அவருடைய மகள் ஸ்ருதிஹாசனும் சேர்ந்து நடிக்கவிருக்கிறார். இந்தப்படத்தில் நீண்டஇடைவெளிக்குப் பிறகு ரம்யாகிருஷ்ணன் கமலுடன் சேர்ந்து நடிக்கவிருப்பதாகச் சொல்லப்பட்டது.

வழக்கம்போல அந்தச் செய்தியை யாரும் உறுதிப்படுத்தாமல் இருந்தனர். இப்போது அதை ரம்யாகிருஷ்ணனே உறுதிப்படுத்தியிருக்கிறார்.

அவருடைய முகநூல் பக்கத்தில் இந்தச்செய்தி உண்மைதான் என்று சொல்லியிருக்கிறார். அதோடு, இந்தப்படத்தில் நடிப்பதைப் பெருமையாகக் கருதுகிறேன் அதேநேரம் கொஞ்சம் பதட்டமாகவும் இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்.

2002 ஆம் ஆண்டு கே.எ.ரவிகுமார் இயக்கத்தில் வெளியான பஞ்சதந்திரம் படத்தில் கமலுடன் நடித்திருந்தார் ரம்யாகிருஷ்ணன். அதன்பின்னர் பதினான்குஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் சேர்ந்து நடிக்கவிருக்கிறார்கள். 

 


Post your comment





Related News
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
சுஜா வருணி திருமணத்தை நடத்தி வைக்கும் கமல்
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions