அமெரிக்க பல்கலைக்கழகத்தில் கமல்ஹாசன் அசத்தல் பேச்சு

Bookmark and Share

அமெரிக்க பல்கலைக்கழகத்தில் கமல்ஹாசன் அசத்தல் பேச்சு

அமெரிக்காவின் பிரபல ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் நடைபெறும் இந்திய மாநாட்டில் மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், நடிகர் கமல்ஹாசன், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் மற்றும் திரைப்பட இயக்குநர் கரண் ஜோஹர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசி வருகின்றனர். 

வாஷிங்டனில் உள்ள ஹார்வார்ட் பல்கலைக்கழக விழா அரங்கத்தில் இன்று ’கருத்து சுதந்திரம்’ என்ற தலைப்பில் நடிகர் கமல்ஹாசன் பேசினார். தென்னிந்தியாவை சேர்ந்த திரைத்துறை பிரபலங்களில் முதன்முறையாக இந்த வாய்ப்பை பெற்ற கமல்ஹாசன் இவ்விழா மேடையில் பேசத் தொடங்கும்போது,

பள்ளிக் கல்வியைகூட முடிக்காதவன் நான் என்பதை உங்களிடையே பதிவு செய்துகொள்ள விரும்புகிறேன் என தெரிவித்தார். ஆனால், கற்றல் என்ற அடிப்படை ஆர்வம் எனக்குள் இருந்ததால் இந்த மேடையில் உங்கள் எதிரில் பேச வந்துள்ளேன். 

ஆஸ்கர் விருது என்பது ஒரு நல்ல அளவுகோல்தான். ஆனால், அதுவே சினிமாவுக்கான உலக அளவிலான மதிப்பீடாகிவிட முடியாது என பலத்த கரவொலிக்கு இடையே அவர்கூறினார். 

அரசியல் ஒரு சாக்கடை என்பதால் அதை விட்டு விலகி இருக்கவே விரும்புகிறேன் என பல சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டிருந்த கமல்ஹாசன், எல்லோரும் அரசியலில் ஆர்வம்காட்ட வேண்டும் எனவும் தனது பேச்சின்போது குறிப்பிட்டார். 

எல்லோரும் அரசியலில் இருக்க வேண்டும். தேர்தல்களில் போட்டியிடும் நோக்கத்தில் அல்லாமல், விழிப்புணர்வுடன் இருப்பதற்காகவும், ஜாக்கிரதையாக இருப்பதற்காகவும் அரசியலில் இருக்க வேண்டும்.

ஆனால், ஆட்டு மந்தைகளைப்போல் அரசியல் மேய்ப்பர்களின் பின்னால் நாம் சென்று விடக்கூடாது எனவும் கமல்ஹாசன் கூறினார்.


Post your comment





Related News
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்
அதல பாதளத்திற்கு போன விஸ்வரூபம்-2 வசூல், கமல்ஹாசன் மார்க்கெட் இப்படியானதே..!
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions