மீண்டும் இணையும் கமல்-மணிரத்னம்

Bookmark and Share

மீண்டும் இணையும் கமல்-மணிரத்னம்

மணிரத்னம் இயக்கத்தில் கமல் மீண்டும் நடிக்க உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ‘நாயகன்’ படம் இவர்கள் கூட்டணியில் வெற்றிகரமாக ஓடி இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தது. 1987–ல் இப்படம் வந்தது. 

கமலஹாசன் வேலு நாயக்கர் கேரக்டரில் நடித்தார். சரண்யா நாயகியாக நடித்தார். இளையராஜா இசையில் ‘தென்பாண்டி சீமையிலே’, ‘நீ ஒரு காதல் சங்கீதம்’, ‘நான் சிரித்தால் தீபாவளி’, ‘அந்தி மழை மேகம்’, ‘நிலா அது வானத்து மேலே’ போன்ற பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் கலக்கின. 

இந்தியாவின் மிகச் சிறந்த படங்கள் பட்டியலில் ‘நாயகன்’ படமும் இடம்பெற்றுள்ளது. ஆனால் இந்த படத்துக்கு பிறகு இருவரும் இணைந்து பணியாற்றவில்லை. வேறு பெரிய பட்ஜெட் படங்களில் பிசியாகி விட்டனர். 

தற்போது இருவரும் இணைவதற்கான காலம் கனிந்துள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் கமல் மீண்டும் நடிக்கப்போவது உறுதியாகி விட்டதாகவும் அதற்கான கதையும் தயாராகி விட்டதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மணிரத்னம் இளம் கதாநாயகர்களை வைத்து காதல் படங்கள் எடுத்து வருகிறார். கமலை வைத்து அதிரடி ஆக்ஷன் படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
சுஜா வருணி திருமணத்தை நடத்தி வைக்கும் கமல்
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions