எம்.எஸ்.ராஜேஸ்வரி மறைவு - நடிகர் கமல்ஹாசன் இரங்கல்

Bookmark and Share

எம்.எஸ்.ராஜேஸ்வரி மறைவு - நடிகர் கமல்ஹாசன் இரங்கல்

‘நாம் இருவர்’ படத்தில் `காந்தி மகான்' என்ற பாடலை பாடியதன் மூலம் சினிமாவில் அறிமுகமான பிரபல பின்னணி பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி உடல் நலக்குறைவால் சென்னையில் நேற்று காலமானார். 

87 வது வயதாகும் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இவர் தமிழில் பாடிய சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா (டவுன் பஸ்), அம்மாவும் நீயே அப்பாவும் நீயே (களத்தூர் கண்ணம்மா), மியாவ், மியாவ் பூனைக்குட்டி (குமுதம்), பேசியது நானில்லை கண்கள்தானே (செங்கமலத் தீவு), பூப் பூவா பறந்து போகும் (திக்குத் தெரியாத காட்டில்) உள்ளிட்ட பல பாடல்கள் மிகப் பிரபலமானவை என்பது குறிப்பிடத்தக்கது. 

இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், நடிகர் கமல்ஹாசனும் அவரது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது, 

`களத்தூர் கமலை மக்களுக்குக் கொண்டு சேர்த்தது அம்மாவும் நீயே என்ற பாடலும் தான். அதைப்பாடிய அம்மையார் எம்.எஸ்.ராஜேஸ்வரி நம்மை விட்டு அகன்றார். அவர் ரசிகர்களுக்கும், குடும்பத்தாருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


Post your comment





Related News
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
அதல பாதளத்திற்கு போன விஸ்வரூபம்-2 வசூல், கமல்ஹாசன் மார்க்கெட் இப்படியானதே..!
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions