வெற்றியைக் கொண்டாடிய பாபநாசம் படக்குழு!

Bookmark and Share

வெற்றியைக் கொண்டாடிய பாபநாசம் படக்குழு!

ஒரு படம் உண்மையான வெற்றி பெற்றால் அவர்களே வெற்றியைக் கொண்டாடிக் கொள்வார்கள். ஆனால், வெற்றி பெற திணறிக் கொண்டிருந்தால் பத்திரிகையளார்களை அழைத்து படம் வெற்றி என மக்களுக்கு சொல்லச் சொல்வார்கள். அந்த வகையில் பாபநாசம் படக் குழுவினர் படத்தின் வெற்றியை பத்திரிகையாளர்களுடன் பகிர்ந்து கொள்ளாமல், அவர்களுக்குள்ளாகவே கொண்டாடிக் கொண்டுள்ளார்கள்.

அந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் கமல்ஹாசன், கௌதமி, இயக்குனர் ஜீது ஜோசப், இசையமைப்பாளர் ஜிப்ரான், படத்தில் நடித்துள்ள மற்ற கலைஞர்கள், படத் தயாரிப்பாளர்கள், அவர்களின் நெருங்கிய நண்பர்கள் என சில முக்கிய புள்ளிகளே கலந்து கொண்டுள்ளனர்.

உத்தம வில்லன் படம் தோல்வியடைந்து கொஞ்சம் வாடிப் போயிருந்த கமல்ஹாசனுக்கு பாபநாசம் படத்தின் வெற்றி மிகப் பெரும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளதாம். படம் வெளிவருவதற்கு முன் அவருடைய ஒட்டு மீசை பற்றியும், கௌதமியை ஜோடியாக்கியது பற்றியும் பல்வேறு விதமான விமர்சனங்கள் வெளிவந்தன.

ஆனாலும், அதையும் மீறி மக்கள் படத்தை ஏற்றுக் கொண்டது அவருக்கு தனிப்பட்ட சந்தோஷத்தைக் கொடுத்துள்ளதாம். அந்த உற்சாகத்தில் தூங்காவனம் படத்தையும் சீக்கிரமே முடித்து வெளியிடும் முனைப்பில் இருக்கிறாராம் கமல்ஹாசன்.


Post your comment





Related News
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா
கமலுக்கு பேரனாகும் சிம்பு
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?
நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும் - ரஜினிக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
சுஜா வருணி திருமணத்தை நடத்தி வைக்கும் கமல்
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions