டெல்லியில் பொன்.ராதாகிருஷ்ணனுடன் நடிகர் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு !

Bookmark and Share

டெல்லியில் பொன்.ராதாகிருஷ்ணனுடன் நடிகர் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு !

மத்திய இணையமைச்சர் பொன்.ராதா‌கிருஷ்ணனை நடிகர் கமல்ஹாசன் மரியாதை நிமித்தமாக நேற்று சந்தித்து பேசினார்.

மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை நடிகர் கமல்ஹாசன் டெல்லியில் சந்தித்து பேசினார்.

டெல்லியில் உள்ள பொன்.ராதாகிருஷ்ணனின் அலுவலகத்திற்கு வந்த நடிகர் கமல்ஹாசனை, பொன். ராதாகிருஷ்ணன் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். இந்த தகவலை பொன்.ராதாகிருஷ்ணன் தனது டிவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பல்வேறு அரசியல் திருப்பங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது, தற்போதைய அரசியல் சூழல்கள் மற்றும் பொதுவான விஷயங்கள் குறித்து இருவரும் பேசியதாக கூறப்படுகிறது.

முன்னதாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க கோரி நடைபெற்ற போராட்டத்திற்கு ஆதரவாக நடிகர் கமல்ஹாசன் டுவிட்டர் மூலம் பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வந்தார். போராட்டத்திற்கும் ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் அவர் குரல் எழுப்பி வந்தார். அப்போது சென்னையில் வைத்து பொன்.ராதாகிருஷ்ணனை, கமல்ஹாசன் பேசியது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான்: கமல்ஹாசன் டுவிட்டரில் கருத்து
ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கைக்கு நடிகர் கமல்ஹாசன் ரூபாய் இருபது லட்சம் நிதி . .
அடுத்தடுத்து வெளியாகும் கமல்ஹாசனின் 6 படங்கள்
இந்து தீவிரவாதம் குழந்தைகளின் கையில் கத்தியை திணிக்கிறது: டுவிட்டரில் கமல் பதிவு
`விஸ்வரூபம்-2' படத்தின் முக்கிய அப்டேட்
ஆந்திரப் பிரதேச அரசின் என்.டி.ஆர். விருதுக்கு கமல், ரஜினி தேர்வு
இந்தியன்-2 படத்திற்காக ஷங்கர் போடும் பக்கா பிளான் - கசிந்த தகவலால் ரசிகர்கள் கொண்டாட்டம்.!
மேற்கு வங்காள முதல்வர் மம்தா பாணர்ஜியை சந்தித்தார் கமல்ஹாசன்
பிக் பாஸ் பிரபலத்தால் ஷாக்கான கமல்ஹாசன் – புகைப்படம் உள்ளே.!
திரையுலகில் அறிமுகமான பிக் பாஸ் ஜூலி – முதல் படம் யாரோட தெரியுமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions