டிவிக்கு சென்ற கமலின் நாயகி பூஜாகுமார்!

Bookmark and Share

டிவிக்கு சென்ற கமலின் நாயகி பூஜாகுமார்!

2000 ஆண்டில் முரளியுடன் காதல் ரோஜாவே என்ற படத்தில் நடித்தவர் பூஜாகுமார். ஆனால் பின்னர் அவரை கோலிவுட் கண்டுகொள்ளவில்லை. அதனால் ஒரு பதிமூன்று ஆண்டுகளாக ஆங்கில படங்களில் நடித்து வந்த அவரை மீண்டும் விஸ்வரூபம் படத்துக்காக கோடம்பாக்கத்துக்கு கொண்டு வந்தார் கமல்.

அதோடு நில்லாமல், விஸ்வரூபம்-2, உத்தமவில்லன் ஆகிய படங்களிலும் பூஜாகுமாரை நடிக்க வைத்தார் கமல். ஆனால் அதையடுத்து அவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் இல்லை.

அதனால் மீண்டும் லண்டன் திரும்பி விட்ட பூஜாகுமார், அங்குள்ள ஒரு பிரபல டி.வி சேனலில் நிகழ்ச்சிகள் தயாரித்து வழங்கி வருவதோடு, நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருக்கிறாராம்.

அந்த வகையில், சினிமாவை விட சின்னத்திரையில்தான் பூஜாகுமார் ரொம்ப பிசி என்கிறார்கள். மேலும், உத்தமவில்லன் படத்தில் நடித்த பிறகு சென்னை பக்கம் வராமல் இருந்த பூஜாகுமார், மார்ச் 1-ந்தேதி சென்னையில் நடக்கவிருக்கும் அப்படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னைக்கு விசிட் அடிக்கிறாராம்.


Post your comment





Related News
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions