கமல் ஹாசனுக்கு நன்றி தெரிவித்த சூர்யா – காரணம் இதுதான்!

Bookmark and Share

கமல் ஹாசனுக்கு நன்றி தெரிவித்த சூர்யா – காரணம் இதுதான்!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜோதிகா நடித்து வெளியான ’36 வயதினிலே’ திரைப்படம் கடந்த ஆண்டின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றாக உருவெடுத்தது. இதைதொடர்ந்து தற்போது அவர் மீண்டும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

’36 வயதினிலே’ பாணியில் பெண்களை மையப்படுத்திய இப்படத்தை ‘குற்றம் கடிதல்’ புகழ் பிரம்மா இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஜோதிகாவுடன் ஊர்வசி, பானுப்ரியா, சரண்யா பொன்வண்ணன் ஆகியோரும் முக்கிய கதாபத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இப்படத்துக்கு ‘மகளிர் மட்டும்’ என தலைப்பு வைத்திருப்பதாக படக்குழு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது கமலின் பழைய பட டைட்டில் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஜோதிகாவின் கணவரும் இப்படத்தின் தயாரிப்பாளருமான சூர்யா இதற்காக கமலுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா
கமலுக்கு பேரனாகும் சிம்பு
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?
நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும் - ரஜினிக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
சுஜா வருணி திருமணத்தை நடத்தி வைக்கும் கமல்
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions