இந்தி படத்தில் நடிக்கும் கமல்?

Bookmark and Share

இந்தி படத்தில் நடிக்கும் கமல்?

கமலஹாசன் – கவுதமி நடித்த ‘பாபநாசம்’ வெற்றிப்படமாக அமைந்தது. இப்போது ‘தூங்காவனம்’ படப்பிடிப்பு முடிவடைந்திருக்கிறது. டப்பிங் மற்றும் தொழில்நுட்ப பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

அடுத்து கமல்–கவுதமி இணைந்து நடிக்கும் வகையில் புதிய கதை தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே ‘விஸ்வரூபம்–2’ படத்தின் வேலைகளையும் கமல் கவனித்து வருகிறார்.

உத்தமவில்லன், பாபநாசம் படங்களை தொடர்ந்து ‘தூங்காவனம்’ படமும் விரைவில் வர இருப்பதால் கமல் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இந்த நிலையில் கமல் மீண்டும் இந்தியில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.

இதில் சைப்அலிகானுடன் கமல் இணைந்து நடிக்கிறார். இது அரசியல் கலந்த திரில்லர் படம் என்று பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Post your comment





Related News
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
சுஜா வருணி திருமணத்தை நடத்தி வைக்கும் கமல்
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions