'தூங்காவனம்' பர்ஸ்ட் லுக்கோடு படத்தை துவங்கும் கமல்!

Bookmark and Share

'தூங்காவனம்' பர்ஸ்ட் லுக்கோடு படத்தை துவங்கும் கமல்!

'உத்தம வில்லன்' படத்தின் ரிலீஸ்க்கு பிறகு கமல் நடிப்பில் 'பாபநாசம்', 'விஸ்வரூபம்-2' என இரண்டு படங்கள் ரிலீஸூக்கு தயாராகியுள்ளன. இந்த சூழலில் தனது அடுத்தப்பட வேலைகளில் கமல் இறங்கிவிட்டார்.

கமலின் அடுத்தபடம் 'தூங்கா வனம்'. இதை கமலே சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தார். இப்படத்தில் கமல் உடன் த்ரிஷா, மனீஷா கொய்ராலா, பிரகாஷ் ராஜ், ரியாஸ் கான் உள்ளிட்ட பலர் நடிக்க இருக்கின்றனர்.

கமலிடம் உதவியாளராக இருந்த ராஜேஷ், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தின் ஷூட்டிங் அடுத்த வாரம் ஐதராபாத்தில் துவங்குகிறது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் உருவாகும் இப்படம், ஆக்ஷ்ன் கம் த்ரில்லராக உருவாக இருக்கிறது.

படத்தை துவங்குவதற்கு முன்பாக தூங்காவனம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிட முடிவு செய்துள்ளார் கமல். அதன்படி இப்படத்திற்கான போட்டோ ஷூட் சென்னையில் நேற்று நடந்தது.

தற்போது பர்ஸ்ட் லுக்குக்கான டிசைனிங் வேலைகள் நடந்து வருகிறது. மே 25ம் தேதி தூங்காவனம் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு, அதன் பின்னர் தனது படப்பிடிப்பையும் துவங்க இருக்கிறார் கமல்.


Post your comment





Related News
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா
கமலுக்கு பேரனாகும் சிம்பு
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?
நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும் - ரஜினிக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
சுஜா வருணி திருமணத்தை நடத்தி வைக்கும் கமல்
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions