விஜய் சேதுபதிக்கு 50 லட்சம் நஷ்டம்

Bookmark and Share

விஜய் சேதுபதிக்கு 50 லட்சம் நஷ்டம்

கமலின் உத்தம வில்லன் படத்தை வெளியிட, தனது தயாரிப்பில் இருக்கும் ரஜினி முருகன், சதுரங்கவேட்டை வினோத்தின் இயக்கத்தில் சூர்யாவை வைத்து தயாரிக்கும் படம் என சம்பாதித்த பணம், சம்பாதிக்கப் போகும் பணம் என அனைத்தையும் அடகு வைத்தார் லிங்குசாமி.

உத்தம வில்லன் மூன்று நாளில் தனது வசூலை நிறுத்திக் கொண்டதால், மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளது திருப்பதி பிரதர்ஸ். ஏறக்குறைய திவால் நிலை.திருப்பதி பிரதர்ஸின் இடம் பொருள் ஏவல் படம் எப்போதோ வந்திருக்க வேண்டும்.

விஜய் சேதுபதி, சம்பள பாக்கியை தந்தால் மட்டுமே டப்பிங் பேசுவேன் என்றதால் படம் முடியாமல் நிற்கிறது. விஜய் சேதுபதிக்கு 6 கோடிகள்வரை மார்க்கெட் இருக்கும் நிலையில், வெறும் ஒன்றரை கோடிக்கு இடம் பொருள் ஏவல் படத்தை ஒப்புக் கொண்டு நடித்துத் தந்தார்.

தன்னை அறிமுகப்படுத்திய சீனு ராமசாமிக்காக இந்த தாராளம். இந்த ஒன்றரையிலும் அரை கோடி நிலுவையில் உள்ளது. அதற்குதான் டப்பிங் பேச மாட்டேன் போர்க்கொடி. 

உத்தம வில்லனால் திருப்பதி பிரதர்ஸ் நஷ்டமடைந்ததை கேட்டறிந்த விஜய் சேதுபதி, மீதமுள்ள அரை கோடியையும் வேண்டாம் என்று தள்ளுபடி செய்துள்ளார்.


Post your comment





Related News
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய சூப்பர் டீலக்ஸ்
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions