ரஜினியை தொடர்ந்து கமலிடமும் ஆதரவு கோரிய விஷால் அணியினர்

Bookmark and Share

ரஜினியை தொடர்ந்து கமலிடமும் ஆதரவு கோரிய விஷால் அணியினர்

நடிகர் சங்கத்துக்கு விரைவில் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில் சரத்குமார் தலைமையிலான ஒரு அணியும், விஷால் தலைமையிலான அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. இவ்விரு அணியிரும் தற்போது வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.

சமீபத்தில் தென்மாவட்டங்களில் பயணம் மேற்கொண்டு, நாடக நடிகர்களிடம் வாக்கு சேகரித்தனர். தற்போது, முக்கிய சினிமா பிரமுகர்களிடம் வாக்கு சேகரிக்கும் பணியில் விஷால் அணியினர் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.

அதன் முதற்கட்டமாக இன்று நடிகர் ரஜினிகாந்தை விஷால் அணியினர் நேரில் சந்தித்து தங்களது அணிக்கு ஆதரவு கோரினர். அவரும் நடிகர் சங்க தேர்தலில் வாக்களிக்க விரும்புவதாக விஷால் அணியினரிடம் உறுதிபட கூறினார்.

பின்னர், விஷால் அணியினர் நடிகர் கமலை நேரில் சந்தித்து தங்களது அணிக்கு ஆதரவு கோரினர். அவரும், நடிகர் சங்க தேர்தலில் வாக்களிப்பதாக அவர்களிடம் உறுதிபட கூறியுள்ளார். இந்த சந்திப்பின்போது, நடிகர்கள் நாசர், கருணாஸ், ரித்தீஷ், கார்த்தி, பொன்வண்ணன், நடிகை குஷ்பு ஆகியோர் உடனிருந்தனர். 


Post your comment





Related News
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
சுஜா வருணி திருமணத்தை நடத்தி வைக்கும் கமல்
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions