நன்றி சொல்லத் தயாராகும் கமல்ஹாசன்

Bookmark and Share

நன்றி சொல்லத் தயாராகும் கமல்ஹாசன்

கமல்ஹாசனின் மனதுக்கு நெருக்கமான படமாக பாபநாசம் படம் அமைந்துவிட்டது போலும், படத்தை வெற்றிப் படமாக்கியதற்காக, நாளை பத்திரிகையாளர்களைச் சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளார். இதற்காக சில சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிகிறது.

மலையாளத்தில் வெற்றி பெற்ற த்ரிஷ்யம் படத்தின் ரீமேக்காக வெளிவந்துள்ள பாபநாசம் படம் தமிழ்நாடு முழுவதும் சுமார் 400 திரையரங்குகளுக்கும் மேல் படம் வெளியாகியது. 

பல திரையரங்குகளில் கடந்த நான்கு நாட்களிலேயே படத்தின் தயாரிப்புச் செலவையும் மீறி படம் வசூலித்து விட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மோகன்லாலுடன் ஒப்பீடு, மீனா இடத்தில் கௌதமி, மலையாளத்தை இயக்கிய அதே இயக்குனர், திருநெல்வேலி தமிழ் என இந்தப் படத்தைப் பற்றி பலரும் பல்வேறு விதங்களில் சமூக வலைத்தளங்களில் கார சாரமாக விவாதித்தனர்.

சமீபத்தில் ஒரு படத்தை இந்த அளவிற்கு விவாதித்திருப்பார்களா என்பது சந்தேகம்தான். அவையெல்லாவற்றையும் மீறி படம் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.  அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சென்னையில் நாளை நடைபெற உள்ள நிகழ்ச்சியின் மேடையில் பாபநாசம் படத்தில் வந்துள்ள காவல் நிலையம், கமல்ஹாசனின் வீடு ஆகியவற்றை உருவாக்கப் போவதாகவும் தெரிகிறது.

அந்த அரங்கிலிருந்துதான் கமல்ஹாசன் பத்திரிகையாளர்களை சந்திக்க உள்ளாராம். இதை வழக்கமான நன்றி நவிலல் சந்திப்பாக இல்லாமல் வித்தியாசமாக நடத்த கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார் என்று தெரிகிறது.


Post your comment





Related News
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
சுஜா வருணி திருமணத்தை நடத்தி வைக்கும் கமல்
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions