கமல்ஹாசனை சந்திக்க விரும்புகிறேன்: இந்தி நடிகர் ராஜ்குமார் ராவ் பேட்டி

Bookmark and Share

கமல்ஹாசனை சந்திக்க விரும்புகிறேன்: இந்தி நடிகர் ராஜ்குமார் ராவ் பேட்டி

இந்தி நடிகர் ராஜ்குமார் ராவும், நடிகை சுருதிஹாசனும் ‘பெஹன் ஹோகி தேரி’ என்ற இந்திப்படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது. இந்நிலையில், ராஜ்குமார் ராவ் மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

நடிகர் கமல்ஹாசன் மிகப்பெரிய திறமைசாலி. அவர் எங்களுக்கு எப்போதும் உத்வேகமாக திகழ்கிறார். நிறைய படங்களில் அவரது நடிப்புத்திறமையை கண்டு வியந்திருக்கிறேன். ரசித்திருக்கிறேன்.

ஆனாலும், ‘அப்பு ராஜா’ (தமிழில் அபூர்வ சகோதரர்கள்) படத்தில் அவரது நடிப்பு என்னை மிகவும் ஈர்த்தது.நான் கமல்ஹாசனின் மிகப்பெரிய ரசிகன். அவரை சந்திக்க விரும்புகிறேன்.

அவருடன் சினிமா பற்றி நிறைய பேச வேண்டும். இதற்காக ஏற்பாடு செய்து தருமாறு சுருதிஹாசனிடம் கேட்டிருக்கிறேன். அவரும் ஏற்பாடு செய்வதாக கூறி இருக்கிறார்.இவ்வாறு ராஜ்குமார் ராவ் தெரிவித்தார். 


Post your comment





Related News
கல்வி, சுகாதாரம், மருத்துவம், போக்குவரத்து சரியில்லை... என் ஆயுசுக்குள் சரி செய்வேன்... கமல்
மலேசியாவில் பரவசமானேன் தேவிஸ்ரீபிரசாத்!
நீண்ட இடைவெளிக்கு பிறகு திரையுலகில் நடக்கும் அதிசயம் - குஷியில் ரசிகர்கள்.!
மெர்சல் படத்தில் அவசியம் கருதியே சர்ச்சை வசனங்களை பேசினேன்: நடிகர் விஜய் பேச்சு
ஜனவரி 26-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்: நடிகர் கமல்ஹாசன் அறிவிப்பு
பயமா எனக்கா! கமல்ஹாசன் அதிரடி பதில்
ரஜினிக்கு வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்த முன்னணி இயக்குனர்
ரஜினி, கமல் என பலர் படங்களில் நடித்த பிரபல நடிகர் மரணம்
ரஜினி, கமலை அடுத்து அரசியலில் குதிக்கும் பிரபல நடிகர் - யார் தெரியுமா?
இதை விட என்ன வேண்டும், சத்தியத்தை காப்பாற்றுவேன் குரு - ஆர்த்தி அதிரடி ட்வீட்.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions