இந்தி படம் இயக்குகிறார் கமல்

Bookmark and Share

இந்தி படம் இயக்குகிறார் கமல்

ஏக் துஜே கே லியே, சாகர் என பல இந்தி படங்களில் நடித்திருக்கிறார் கமல். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இந்தியில் நடிக்க முடிவு செய்திருக்கிறார். ‘அமர் ஹெயின்’ படத்தில் நடிப்பதுடன் இயக்குனர் பொறுப்பும் ஏற்றிருக்கிறார்.

இதுபற்றி கமல் கூறியது:கடந்த 6 வருடமாக இந்தி பட ஸ்கிரிப்ட் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கிறேன். மற்ற படங்களின் பணி இருந்ததால் இந்தி படம் தள்ளிப்போனது. 6 வருடத்துக்கு முன் இக்கதையை உருவாக்கியபோதே சயீப் அலிகான் தான் கதைக்கு பொருத்தமாக இருப்பார் என்று எண்ணினேன். அவரது  கதாபாத்திரம் நல்லவிதமாகவே சித்தரிக்கப்படுகிறது. எனவே அவர்தான் ஹீரோ. சயீப்பிடம் இதுபற்றி நான் இன்னும் பேசவில்லை. 


தயாரிப்பாளர் தரப்பில் பேசி வருகின்றனர். ஆனால் இந்த படம் பற்றிய விவரம் சயீப்பிற்கு தெரியும். வட இந்தியா முழுவதும் இக்கதை பயணிக்கிறது. தொடர்ந்து லண்டன், துபாய், ஜோர்டன். அமெரிக்கா என பல இடங்களில் படமாக உள்ளது. இது சரித்திர பின்னணியில் அமைந்த கதை அல்ல. இன்றைக்கு நாட்டில் நடக்கும் யதார்த்த சம்பவங்களுடன் ஆக்‌ஷன் காட்சிகளும் கலந்த கதை

. இது அரசியல் படமா என்கிறார்கள். ஆனால் அதைவிடவும் பெரிய கதை. தற்போது பணியாற்றி வரும் படங்களை முடித்துக்கொடுத்தவுடன் புதிய படத்தின் பணியில் ஈடுபடுவேன்.இவ்வாறு கமல் கூறினார்


Post your comment





Related News
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
சுஜா வருணி திருமணத்தை நடத்தி வைக்கும் கமல்
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
ஜெயலலிதாக வாழ்க்கைப் படத்தில் சசிகலாவாக நடிக்க இரு நடிகைகளுடன் பேச்சுவார்த்தை
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு
புதிய பரிமாணத்தில் வெளியாகும் வசந்த மாளிகை
பேய் படங்களில் ஆர்வம் காட்டும் அஞ்சலி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions