நா.முத்துக்குமார் மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி, நடிகர் கமல் இரங்கல்

Bookmark and Share

நா.முத்துக்குமார் மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி, நடிகர் கமல் இரங்கல்

பிரபல திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமார் இன்று உடல்நிலை குறைவால் காலமானார். அவருக்கு வயது 41. நா.முத்துக்குமாரின் உடல் சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

திரைத்துறையை சேர்ந்த பலரும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி நா.முத்துக்குமாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளர்.

நா.முத்துக்குமார் தன்னுடைய 41 வயதிலேயே மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டு மறைந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் மிகுந்த வருத்தமும் அடைந்தேன்.

திரைத்துறையில் தனி முத்திரை பதித்த நா.முத்துக்குமார் என் மீது பாசமும், பற்றும் வைத்திருந்த தம்பி. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். அதேபோல், நடிகர் கமலஹாசனும் நா.முத்துக்குமாரின் மறைவுக்கு டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர்கூறும்போது, நியாயமில்லை. 41 சாகும் வயதில்லை. எனினும் அவருடைய கவிக்கும் நட்பிற்கு நன்றி என்று அவர் கூறியுள்ளார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions