ஆவி படத்துக்குதான் மார்க்கெட்; கமல்

Bookmark and Share

ஆவி படத்துக்குதான் மார்க்கெட்; கமல்

ஏ.பி.ஸ்ரீதர் தயாரிக்க, ஆதித்யா பாஸ்கர் இயக்க மய்யம் என்ற படத்தில் நவீன் சஞ்சய்,  ஜெய் குஹானி நாயகன், நாயகியாக நடிக்கிறார்கள்.

இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா கமல்ஹாசன் அலுவலகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் கமல்ஹாசன்  கலந்து கொண்டு வெளியிட, கவுதமி பெற்றுக் கொண்டார்.

கமல் பேசிய போது,“எனக்கு ஆவிகள் மீது நம்பிக்கை கிடையாது.  தற்போது அதற்குதான் மார்க்கெட் உள்ளது. இவ்விழா நடைபெறுகிற இடத்தில் தான் ஆர்.சி.சக்தி, கமல் என்ற இரு இளைஞர்கள் உணர்ச்சிகள் என்ற படத்தை தொடங்கினார்கள்.

நடிகர் ரஜினிகாந்த் சிகரெட் பிடிப்பது போன்ற ‘போட்டோஷூட்’டும் இங்கு நடந்தது. மணிரத்னம், பாரதிராஜா போன்றவர்களும் இங்கு நடமாடி இருக்கிறார்கள். இப்படி பலருடைய சினிமா வாழ்க்கை இங்குதான் அரங்கேற்றப்பட்டது. அப்படிப்பட்ட இடத்தில் இளைய தலைமுறையினர் எடுக்கும் ‘மய்யம்’ படவிழாவும் நடக்கிறது.

இவர்களும் வளர வாழ்த்துகிறேன்”இவ்வாறு கூறினார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions