என்னை மட்டும் குறிவைத்து எதிர்ப்பது ஏன்.? கமல் வருத்தம்

Bookmark and Share

என்னை மட்டும் குறிவைத்து எதிர்ப்பது ஏன்.? கமல் வருத்தம்

தொடர்ந்து எனது படங்களை மட்டுமே குறிவைத்து எதிர்க்கிறார்கள் என்று கூறியுள்ளார் நடிகர் கமல்ஹாசன். உத்தமவில்லன் படம் தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில், ஆழ்வார்பேட்டையில் உள்ள கமலது இல்லத்தில் நடந்தது.

அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு வழக்கமான தனது ஸ்டைலில் பதில் அளித்தார் கமல். அப்போது உங்களது படங்களுக்கு மட்டும் தொடர்ந்து எதிர்ப்பு கிளம்புவது ஏன் என்று கேட்டபோது, எனது ஒவ்வொரு படங்களுக்கும் நான் பிரச்னைகளை சந்தித்து வருகிறேன்.

சண்டியர் என்ற பெயரில் ஒரு படம் எடுத்தேன், படத்தின் தலைப்பிற்கே எதிர்ப்பு தெரிவித்தனர். சமீபத்தில் அதேபெயரில் ஒரு படம் வந்தது. ஆனால் அதற்கு எதிர்க்கவில்லை, மும்பை எக்ஸ்பிரஸ், தசாவதாரம், விஸ்வரூபம் என தொடர்ந்து என் படங்களுக்கு எதிர்ப்பு வருகிறது.

சமீபத்தில், பாபநாசம் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தொடர்ந்து என்னை மட்டும் ஏனோ குறிவைத்து எதிர்க்கிறார்கள். இது நல்ல வண்டி இலவசமாக ஏறிப்போய் அடுத்த நிறுத்தத்தில் இறங்கி விடலாம் என்று கருதி இப்படி செய்கிறார்கள் என்று நினைக்கிறேன் என்று கூறினார் கமல்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions