கமலை சீண்டிப் பார்க்கும் நடிகை பார்வதி!

Bookmark and Share

கமலை சீண்டிப் பார்க்கும் நடிகை பார்வதி!

பெங்களூர் டேஸ் மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கான ‘பெங்களூர் நாட்கள்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. மலையாள பதிப்பில் சாரா எலிசபெத் எனும் கதாபாத்திரத்தில் கிருஸ்தவ பெண்ணாக நடித்திருந்த நடிகை பார்வதி, தமிழிலும் அதே வேடத்தில் நடித்துள்ளார்.

இதுகுறித்து நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இவர், ” மலையாளத்தில் இருந்து தமிழில் ரீமேக் செய்யும்போது நிறைய மாற்றம் செய்கிறார்கள் இதில் எனக்கு உடன்பாடில்லை.

அங்கு கிருஸ்துவ குடும்பமாக காட்டினால் இங்கு அதை மாற்றுகிறார்கள். அது என்ன படம் என்று சொல்லி நான் சர்ச்சையில் சிக்க விரும்பவில்லை” என கூறினார். எனினும் இவர் கமலின் பாபநாசம் படத்தை தான் மறைமுகமாக தாக்கியுள்ளார் என பலரும் விவாதித்து வருகிறார்கள்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions