கமலுக்கு மீண்டும் ஆபரே‌ஷன்!

Bookmark and Share

கமலுக்கு மீண்டும் ஆபரே‌ஷன்!

நடிகர் கமலஹாசன் கடந்த 13–ந்தேதி இரவு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் மாடிப்படியில் இறங்கியபோது தவறி விழுந்தார். உடனடியாக அவர் சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை டாக்டர்கள் பரிசோதித்தபோது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து கமலுக்கு உடனடியாக காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர் 3 வாரத்தில் வீடு திரும்புவார் என்றும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் ஆஸ்பத்திரிலேயே தங்கி ஓய்வு எடுத்து வந்தார்.

இந்த நிலையில் கமலுக்கு காலில் ஆபரே‌ஷன் செய்த இடத்தில் கடும் வலி ஏற்பட் டது. அவருக்கு பரிசோதனை செய்தபோது அறுவை சிகிச்சை செய்த இடத்தில் துகள்கள் இருந்தது தெரிய வந்தது.

இதனால் கமலுக்கு நேற்று மீண்டும் காலில் ஆபரே‌ஷன் செய்யப்பட்டது. ஏற்கனவே ஆபரே‌ஷன் செய்த பகுதியில் இருந்த துகள்கள் அகற்றப்பட்டன. 2 மணி நேரம் இந்த அறுவை சிகிச்சை நடந்தது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்ததாகவும் அவர் தொடர்ந்து சிகிச்சை பெறுவது அவசியம் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து கமலிடம் கேட்டபோது, “நான் இப்போது நலமாக உள்ளேன். விரைவில் வீடு திரும்புவேன்” என்றார். இந்த நிலையில் நடிகர் ரஜினி, கமலிடம் போனில் தொடர்பு கொண்டு பேசி உடல் நலம் பற்றி விசாரித்தார். அதற்கு கமல் நலமாக இருப்பதாக கூறி ரஜினிக்கு நன்றி தெரிவித்தார்.

 


Post your comment

Related News
16 வயதினிலே படத்திற்கு நடிகை ஸ்ரீதேவி எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா?
ரஜினி, கமலின் அரசியல் குறித்து நடிகர் சத்யராஜின் பேச்சுக்கு பார்த்திபன் பதிலடி
நடிகர் சங்க கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் ரஜினி, கமல்
வேகமெடுக்கும் விஜய், அஜித்... வேடிக்கை பார்க்கும் ரஜினி, கமல்?
டிஜிட்டலில் உருவாகும் ரஜினி - கமலின் பழைய படங்கள்!
நட்சத்திர கிரிக்கெட்டிற்கு பிறகு ரஜினி, கமல் இணையும் படம்!
நடிகர் சங்க கட்டிடம் அமைவது குறித்து விஷால் விளக்கம்..!
கமல் வழியில் ரஜினி
விஜயகாந்த் மகன் பட விழாவை ரஜினி, கமல் புறக்கணித்தது ஏன்?
ரஜினி, கமலை நேரில் சென்று அழைத்த ஷங்கர்!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions