கமலுடன் மீண்டும் இணைந்த ரம்யா கிருஷ்ணன்!

Bookmark and Share

கமலுடன் மீண்டும் இணைந்த ரம்யா கிருஷ்ணன்!

கமல் நடிப்பில் வெளிவந்த ‘தசவதாரம்’ படத்தில் இடம் பெற்ற பல்ராம் நாயுடு என்ற கதாபாத்திரத்தை வைத்து ‘சபாஷ் நாயுடு’ என்ற புதிய படம் உருவாகி வருகிறது.

இப்படத்தில் கமல் நடிக்கிறார். பிரபல மலையாள இயக்குனர் டி.கே.ராஜீவ்குமார் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் மூலம் ஸ்ருதிஹாசன் முதன்முறையாக தனது அப்பா கமலுடன் இணைந்து நடிக்கிறார். கமலின் இளைய மகளான அக்ஷரா ஹாசன் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இப்படக்குழுவினருடன் ரம்யா கிருஷ்ணன் இணைந்துள்ளார். இப்படத்தில் கமலுக்கு மனைவியாக ரம்யா கிருஷ்ணன் நடித்து வருகிறார்.

இப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் மற்றும் ராஜ்கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகிறது. ‘சபாஷ் நாயுடு’ தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகிறது.

இதற்கு முன் கமலுடன் ரம்யா கிருஷ்ணன் இணைந்து நடித்த பஞ்சதந்திரம் படம் மெகா ஹிட் படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!
சாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் 'அகோரி
மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
பிரபல இளம் நடிகருடன் படுக்கையறையில் ரம்யா கிருஷ்ணன் - வைரலாகும் லீக் புகைப்படம்.!
நா எப்போ அப்படி சொன்னே- பிரபல தொகுப்பாளர் பாவனா ஷாக்
பிரபல நடிகையை கடவுளாக பார்க்கும் சரவணன் மீனாட்சி ரக்ஷ்சிதா - இதுதான் காரணமாம்!
லட்சுமி ராமகிருஷ்ணனை அசிங்கப்படுத்திய முன்னணி இயக்குனர்
பெண்கள் பிரச்னைக்கு எதிராக போராட சிம்புவை அழைத்த லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன்
நான் அந்த டைப் தான்! சரவணன் மீனாட்சி ரம்யா ஓபன் டாக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions