பூரண குணமடைந்தார் கமல்

Bookmark and Share

பூரண குணமடைந்தார் கமல்

கமல் கடந்த மாதம் அவரது அலுவலக படிக்கட்டில் இருந்து கால் தவறி கீழே விழுந்தார். இதனால், அவரது காலில் பலத்த அடிபட்டது. தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்ற அவருக்கு காலில் இரண்டு முறை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 

சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பிய கமல், அங்கு டாக்டர்களின் அறிவுரைப்படி உடற்பயிற்சிகளை செய்ய ஆரம்பித்தார். இடையிடையே, இவர் நடித்துக் கொண்டிருக்கும் ‘சபாஷ் நாயுடு’ படத்திற்கான எழுத்து வேலைகளையும் செய்து கொண்டே இருந்தார்.

இந்நிலையில், தற்போது கமல் பூரண குணமடைந்துவிட்டதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். அவர் இனி வழக்கம்போல் படப்பிடிப்பில் கலந்துகொள்ளலாம் என்றும் அறிவுரை கூறியுள்ளனர். 

இதுகுறித்து கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறும்போது, டாக்டர்கள் நான் வேலை செய்வதற்கான தகுதியை பெற்றுவிட்டேன் என்று கூறியுள்ளார். இவ்வளவு சீக்கிரமாக குணமாகியது உங்களுடைய அன்பால்தான். அனைவருக்கும் நன்றி. நான் 'சபாஷ் நாயுடு' வழியாக என்னுடைய அன்பை வெளிப்படுத்தவிருக்கிறேன் என்று கூறியுள்ளார். 


Post your comment





Related News
கார்த்தியின் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தை பார்த்து பாராட்டிய இந்திய துணை குடியரசு தலைவர் !
சாதிக்கு எதிரான கமல் - சபாஷ் நாயுடு டைட்டில் மாறுமா? புதிய விளக்கம்
ஒரு மகா கலைஞனை இழக்கிறோம்: கமல் பற்றி பிரபல இயக்குனர்
‘பாகுபலி-2’ படத்தை ஆஸ்கார் விருதுக்கு அனுப்ப சந்திரபாபு நாயுடு தீவிரம்
டெல்லியில் விவசாயிகள் போராடி வரும் நிலையில் சினிமா சம்பந்தமாக வெங்கய்யா நாயுடுவை சந்தித்த விஷால் மற்றும் குழு
பாவனாவுக்கு நீதி கிடைக்க களத்தில் இறங்கிய மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு
விஸ்வரூபம் 2 இருக்கட்டும், சபாஷ்நாயுடு படத்துக்கும் பிரச்சனையா?
நாயுடுகளுக்கு கமல் போடும் சபாஷ்! மாற்றமுடியாது என்று பதில்!
சபாஷ் நாயுடுவுக்கு சகுனம் சரியில்லை....?
என்ன ஆச்சு சபாஷ் நாயுடு? கவலையில் கமல் ரசிகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions