கமலை பின்பற்றும் சிவகார்த்திகேயன்!

Bookmark and Share

கமலை பின்பற்றும் சிவகார்த்திகேயன்!

கமல் நடிப்பில் வெளிவந்த அவ்வை சண்முகி படத்தில் கமல் மாமி வேடத்தில் நடித்து அசத்தினார். அப்படத்தில் அவர் பெண் வேடத்தில் நடித்தது மட்டுமல்லாமல், அந்த கதாபாத்திரத்திற்கு தனது சொந்த குரலில் டப்பிங்கும் பேசினார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை கொடுத்தது.

இந்நிலையில், சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் ‘ரெமோ’ படத்தில் பெண் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த கதாபாத்திரத்திற்கு கமலைப் போல் தனது சொந்த குரலிலேயே டப்பிங் பேசவிருக்கிறாராம் சிவகார்த்திகேயன். இதற்காக தற்போது பயிற்சி எடுத்து வருவதாக கூறப்படுகிறது. 

இப்படத்தை பாக்யராஜ் கண்ணன் என்பவர் இயக்கி வருகிறார். ஒளிப்பதிவு பி.சி.ஸ்ரீராம், சவுண்ட் என்ஜீனியர் ரசூல் பூக்குட்டி, இசை அனிருத், மேக்கப்புக்கு ஹாலிவுட் கலைஞர் சீன் பூட் என ஒரு மிகப்பெரிய பட்டாளமே களமிறங்கியுள்ளது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions