கமல் வேடத்தில் த்ரிஷா...?!

Bookmark and Share

கமல் வேடத்தில் த்ரிஷா...?!

1979ம் ஆண்டு கமல்ஹாசன், இரண்டு வேடங்களில் நடித்து வெளியான படம் கல்யாண ராமன். அண்ணன்-தம்பி என இரண்டு வேடங்களில் நடித்தார் கமல்.  இதில் ஒரு கமல் மூளை வளர்ச்சி சற்று குறைவானவர்.

மூளை வளர்ச்சி குறைவான கல்யாணம் எனும் கமலின் சொத்துக்களை அடைய எதிரிகள் அவரை கொன்று விடுகின்றனர். இறந்து போன கமல் ஆவியாகி, தன் அண்ணன் ராமன் உதவியோடு எதிரிகளை பழிவாங்குவது தான் படத்தின் கதை.

கல்யாணம் கேரக்டரில் வரும் கமல், பல் சற்று நீண்டபடி குழந்தை தன்மையோடு மிகவும் வித்தியாசமாக நடித்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற காதல் வந்திடுச்சு... போன்ற பாடல்கள் மிகவும் பிரபலம்.

இந்நிலையில், இப்படம் இப்போது ரீ-மேக் ஆக இருக்கிறது. இதில் கமல் நடித்த வேடத்தில் நடிகை த்ரிஷா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கமலின் கதையை அப்படியே த்ரிஷாவுக்காக மாற்ற உள்ளார்களாம்.

அதன்படி த்ரிஷா, அக்கா-தங்கை என இரண்டு வேடங்களில் நடிக்க இருப்பதாகவும், இப்படத்தை த்ரிஷாவின் மேனேஜர் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions