உத்தமனும் நானே... வில்லனும் நானே... கமல் பேட்டி!

Bookmark and Share

உத்தமனும் நானே... வில்லனும் நானே... கமல் பேட்டி!

கமலஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள உத்தமவில்லன் படம் தொடர்பாக கமல், இன்று தனது ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் மீடியாக்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், உத்தமவில்லன் படத்தில் உத்தமனும் நானே... வில்லனும் நானே... இது எனது வாழ்க்கை சம்பந்தப்பட்ட படமா என்று கேட்கிறார்கள்.? எனது ஒவ்வொரு கதையிலும் என் வாழ்க்கை சம்பந்தப்பட்டது இருக்கும்.

உத்தமவில்லன் படத்தில் மார்க்கதர்சி ரோலில் கே.பாலசந்தர் நடித்துள்ளார். அவரை நடிக்க வைக்கலாமா.? வேண்டாமா.? என்று பலமுறை யோசித்து அவரிடம் சொன்னபோது, அவர் நடிக்க சம்மதித்தார்.

உத்தமவில்லன் படத்தில் ஆண்ட்ரியா, பூஜா குமார், கே.பாலசந்தர், கே.விஸ்வநாத், ஜெயராம், ஊர்வசி, எம்.எஸ்.பாஸ்கர், சித்ரா லட்சுமணன் என ஒரு பெரிய நட்சத்திர கூட்டமே நடித்துள்ளனர்.

நானும், ரமேஷ் அரவிந்த்தும் பலவிதமான கதைகளை விவாதித்து இந்த கதையை தேர்வு செய்தோம், இந்த கதையை அவரிடம் சொன்னபோது ஆச்சர்யப்படவில்லை, நிச்சயம் ஒரு வித்தியாசமான படமாக உத்தமவில்லன் படம் இருக்கும்.

உத்தமவில்லன் படத்தின் ரிலீஸை தொடர்ந்து பாபநாசம், விஸ்வரூபம்-2 என அடுத்தடுத்து படங்கள் ரிலீஸாக இருக்கின்றன.இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.


Post your comment





Related News
நயன்தாராவுக்கு வில்லனாக நடித்தது மிகப்பெரிய அந்தஸ்து: புதுமுக வில்லன் நடிகர்
அஜித் படத்துக்கு வில்லன் ரெடி
ஒரே வருடத்தில் 4 படங்களில் நடித்து சாதித்த உலக நாயகன்
உத்தம வில்லனுக்கு சர்வதேச திரைப்பட விழாவில் ஐந்து விருதுகள்
உத்தமவில்லன் படம் ஆன்லைனில் வெளியீடு
ரசிகர்கள் பற்றி கவலை இல்லை
இந்த வாரம் சிறு படங்களின் வாரம்
3 மணி நேரம் ஓடும் உத்தமவில்லன்!
\'உத்தம வில்லன்\' முதல் நாள் ரிப்போர்ட்...
உத்தமவில்லன் படத்தில் 15 நிமிட காட்சிகள் குறைப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions