தமிழ் கலாச்சாரத்தை தடுக்க வேண்டாம்- ஜல்லிக்கட்டுக்கு கமல் ஆதரவு

Bookmark and Share

தமிழ் கலாச்சாரத்தை தடுக்க வேண்டாம்- ஜல்லிக்கட்டுக்கு கமல் ஆதரவு

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதி மன்றம் தடைவிதித்துள்ளது. இந்த நிலையில் "ஜல்லிக்கட்டு தமிழர்களின் வீர விளையாட்டு அது தொடர வேண்டும்" என்று கமல் கூறினார். 

பிரபல போட்டாகிராபர் ஜே.சுரேசின் ஜல்லிக்கட்டு புகைப்பட கண்காட்சியை லலித் அகாடமியில் துவக்கி வைத்து பேசிய கமல் “ஜல்லிக்கட்டை விலங்குகளை துன்புறுத்தும் விளையாட்டு என்று தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. 

ஸ்பெயின் நாட்டிலும், இத்தாலியிலும் நடப்பவை தான் விலங்குகளை துன்புறுத்தும் விளையாட்டுகள். அவைகளை நான் பார்த்திருக்கிறேன். மிருகங்களுக்கு எந்த வாய்ப்பும் கொடுக்காமல் அவை தப்பிச் செல்லும்போது கத்தியால் குத்தி கிழித்து கறி பண்ணி சாப்பிடுகிறார்கள். ஆனால் ஜல்லிகட்டில் மாட்டின் மீது ஆணியை கொண்டு கீறினால் கூட அவன் வீரன் கிடையாது.

உண்மையில் இதற்கு பெயர் ஜல்லிக்கட்டு அல்ல ஏறு தழுவுதல். அதை தழுவி விளையாடும் விளையாட்டே தவிர கொம்பை பிடித்து வளைப்பதோ, கொலை பண்ணுவததோ இல்லை.

அமைதியான காலங்களில் இளைஞர்கள் மோதலுக்கு பயந்துவிடக்கூடாது என்பதால் அவர்களின் தசை நார்களை பதம் செய்வதற்காக மாடுகளை தழுவும் வீர விளையாட்டாக ஜல்லிக்கட்டு இருக்கிறது. அது தொடர வேண்டும் என்பதுதான் என்போன்ற ஏறு தழுவும் தமிழர்களின் வேண்டுகோள். 

தமிழ் கலாச்சாரம், பண்பாட்டை பிரதிபலிக்கும் விளையாட்டை தடுக்க வேண்டாம். இவ்வாறு கமல் பேசினார்.

 

 

 


Post your comment





Related News
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions