‘பயம் ஒரு பயணம்’ போஸ்டரை வெளியிட்ட கமலஹாசன்!

Bookmark and Share

‘பயம் ஒரு பயணம்’ போஸ்டரை வெளியிட்ட கமலஹாசன்!

சமீபத்தில் படம் பார்த்த சிலரின் முதுகு சில்லிட வைத்த படமான ‘பயம் ஒரு பயணம்’ படத்தை தயாரித்து இருப்பவர்கள் எஸ் துரை, எஸ் சண்முகம் ஆகியோர். புதிய இயக்குனர் மணிஷர்மா இயக்கத்தில் உருவான ‘பயம் ஒரு பயணம்’ போஸ்டரை பத்மஸ்ரீ டாக்டர் கமலஹாசன் வெளயிட்டார்.

‘உன்னை போல் ஒருவன்’ படத்தில் ஒரு முக்கிய கதாப் பாத்திரத்தில் நடித்த டாக்டர் பரத் உடன் விசாக சிங் இணைந்து நடிக்கும் இந்த படம் இதுவரை வந்த பேய் படங்களில் வித்தியாசமானது.

திறமையான புதிய இளைஞர்கள் சினிமாவுக்கு வந்தால் அவர்களை வரவேற்று, ஊக்கப் படுத்தி, நல்ல வார்த்தைகளை உரமாக உச்சரிக்கும் டாக்டர் கமலஹாசன், ‘பயம் ஒரு பயணம்’ படக் குழுவினரை பற்றி கூறியதாவது ‘டாக்டர் பரத் தொழில் முறையில் ஒரு மருத்துவர்.

ஆயினும் சினிமா மீது அவருக்குள்ள காதல் அபரிதமானது. ‘உன்னை போல் ஒருவன்’ படத்தில் அவர் என்னுடன் இணைந்து நடித்து இருந்தார். நல்ல பெயரையும் வாங்கினார்.

சமீபத்தில் அவர் நடிப்பில் உருவான் ‘பயம் ஒரு பயணம்’ படத்தின் ஒரு சிலக் காட்சிகளை காண நேர்ந்தது. அருமையாக இருந்தது. அவருடைய ஆர்வம் திறமையாக வெளிப் படுவது தெளிவாக தெரிகிறது. டாக்டர் பரத்துக்கும் அவருடன் திறமையாக பணியாற்றிய ‘பயம் ஒரு பயணம்’ படக்குழுவினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.’ எனக் கூறினார்.

 


Post your comment





Related News
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions