11 வருடங்களுக்குப் பிறகு இளையராஜாவுடன் இணையும் கமல்ஹாசன்!

Bookmark and Share

11 வருடங்களுக்குப் பிறகு இளையராஜாவுடன் இணையும் கமல்ஹாசன்!

தூங்காவனம் படத்திற்குப் பிறகு மலையாள இயக்குனர் ராஜீவ் குமார் இயக்கத்தில் கமல்ஹாசன், அமலா நடிக்க உள்ள படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் தயாராகிறது. படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வமான  அறிவிப்பு வெளியாகவில்லை. 

தெலுங்கில் அம்மா நானா ஆட்டா எனப் பெயரிடப்பட்டுள்ளதாக கடந்த வாரம் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தப் படம் ஒரு முழுமையான நகைச்சுவைப் படமாக உருவாக உள்ளதாக தெரிகிறது. கமல்ஹாசன் நடித்த கடந்த மூன்று படங்களுக்கும் ஜிப்ரான் இசையமைத்திருந்தார். 

ஆனால், கமலின் புதிய படத்திற்கு  இளையராஜா இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. கமல்ஹாசனின் மனம் கவர்ந்த இசையமைப்பாளர் இளையராஜா மட்டுமே. 

அதைப் பல மேடைகளில் கமல்ஹாசனே தெரிவித்துள்ளார். மீண்டும் இந்தக் கூட்டணி இணையவிருப்பது ரசிகர்களிடையே அதிக ஆவலை ஏற்படுத்தியுள்ளது.

2004ல் வெளிவந்த விருமாண்டி திரைப்படத்திற்குப் பிறகு கமல் - இளையராஜா கூட்டணி 11 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்
அமெரிக்காவில் நடைபெறும் இந்திய சுதந்திர தின விழாவில் கமல்ஹாசன், ஸ்ருதி பங்கேற்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
எங்களை பிக்பாஸ் வீட்டிற்குள் விட்டால் இதுதான் நடக்கும் நிச்சயம்! ஜோடியாக வரவிரும்பும் பிரபல நடிகர், நடிகை இவர்கள் தான்
இந்த வார இறுதியில் பிக்பாஸ் வீட்டுக்கு வரும் முன்னணி நடிகை! உறுதியான தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions