உலகிலேயே சிறந்த மனிதர் என் அப்பாதான்- ஸ்ருதி

Bookmark and Share

உலகிலேயே சிறந்த மனிதர் என் அப்பாதான்- ஸ்ருதி

உலக நாயகன் கமல் மகள் ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளிலும் முன்னணி நாயகியாகிவிட்டார். இவர் விஜய் ஜோடியாக  நடித்திருக்கும் ‘புலி’ படம் அக்டோபர் 1–ந்தேதி வெளியாகிறது. அஜித் ஜோடியாக நடிக்கும் ‘வேதாளம்’ படம் தீபாவளிக்கு வருகிறது. மேலும் சூர்யாவுக்கு ஜோடியாக சிங்கம்-3 ல் நடித்து வருகிறார்.

ஸ்ருதிஹாசன் தன் தந்தை கமல் மீது அளவில்லாத அன்பை வைத்துள்ளார். அவர் தன் தந்தை கமலை பற்றி கூறுகயில், “என்  தந்தை நேர்மையானவர். சிறு வயதில் என் அப்பாமீது அன்பு மட்டும்தான் இருந்தது. இப்போது அவர்மீது மரியாதையும் வந்துவிட்டது.

உலகிலேயே சிறந்த மனிதர் என் அப்பாதான். குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று அவருக்கு நன்றாகத் தெரியும். குழந்தைகளை சுயமாகச் செயல்படவிட்டு அவர்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் பெற்றோர் கவனிக்க வேண்டும். அவர்களைத் தடுத்தால் எதிர்காலத்தில் சொந்தக் காலில் நிற்க முடியாமல் போய்விடும்.

என் அப்பா எங்களை சிறு வயதில் சுதந்திரமாகச் செயல்பட விட்டார். தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் அவரது சிந்தனையாக இருந்தது. அப்படி அவர் வளர்த்ததால்தான் எது சரி, எது தப்பு? என்று என்னால் இப்போது புரிந்துகொள்ள முடிகிறது. என் அப்பா மீது எனக்கு அபாரமான அன்பு இருக்கிறது.’’ என்று கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி
விஜய் சேதுபதிக்கு சுருதிஹாசன் ஜோடி
தைவான் பறக்கும் இந்தியன் 2 படக்குழு
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions