சினிமா வேறு....வாழ்க்கை வேறு....: நடிகர் கமல்ஹாசன்

Bookmark and Share

சினிமா வேறு....வாழ்க்கை வேறு....: நடிகர் கமல்ஹாசன்

இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள், நாளை முதல் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளதையடுத்து, தமிழக காவல்துறை கட்டாயமாக வாகனஓட்டிகள் பின்பற்றும் வகையிலான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டோர், ஹெல்மெட் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகின்றனர்.

ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து, நடிகர் கமல்ஹாசன், ஒரு வீடியோவில் பேசியுள்ளார். அதில் கமல் கூறியிருப்பதாவது, இருசக்கர வாகனத்தில் செல்லும் போது தலையைப் பாதுகாக்க, கட்டாயம் தலைக்கவசம் அணியுங்கள். இதைப் பற்றி நாங்கள் கூறினால் நீங்கள் தலைக்கவசம், அணியாமல் தானே படத்தில் வண்டி ஓட்டுகிறீர்கள் என்று எதிர்வாதம் செய்யாதீர்கள்.

சினிமா வேறு.... வாழ்க்கை வேறு....:  சினிமாவில் நாங்கள் நடிக்கும் போது எங்கள் அருகினில் பாதுகாப்புக்கு என்று, ஏராளாமான பேர் நிற்கிறார்கள். நாங்கள் நடிப்பதை பாதுகாப்புடன் தான் செய்து கொண்டிருக்கிறோம், அதனால் எங்களைப் பார்த்து விட்டு நீங்கள் தலைக்கவசம் அணியாமல் வண்டி ஓட்ட வேண்டாம்.

சினிமாவில் சூப்பர்மேன் பறந்து போகிறார், உங்களால் அது போன்று செய்ய முடியுமா? மேலும் நீங்கள் ஒரு சர்க்கஸ் நிகழ்ச்சிக்கு செல்லும்போது அந்த நிகழ்ச்சியில் பார்களில் தொங்குவார்கள் உங்கள் வீட்டு பைப்புகளில் அது போன்று செய்ய முடியுமா? அது போன்று தலைக்கவசம் அணிவதையும் சிந்தித்துப் பார்த்து செய்யுங்கள்.

இருசக்கர வாகனத்தில் செல்லும் போது தலைக்கவசம் அணிந்து செல்லுங்கள், உங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று தனது ரசிகர்களுக்கு தலைக்கவசம் பற்றிய விழிப்புணர்வை எடுத்துரைத்திருக்கிறார் கமல்.


Post your comment





Related News
தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்
சவாலான கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை: சுருதிஹாசன்
சங்கமித்ரா படத்திலிருந்து ஸ்ருதி ஹாசன் விலகியதன் காரணம் இதுதானா?
சாருஹாசன், ஜனகராஜ் இணையும் தாதா 87
எங்க அண்ணன் ரஜினி பார்த்துக்கொள்வார்- கமல்ஹாசன் உருக்கம்
புரியாதோர்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள்! கமல் சர்ச்சையான ட்வீட்
கௌதமி விவகாரம் பற்றி பேச கமலை சந்தித்தாரா ரஜினி?
“கருப்புப் பணம் வாங்கும் நடிகர்கள் மத்தியில் வெள்ளையில் பணம் வாங்கும் ஒரேநடிகர் கமல்”!
ஸ்ருதி ஹாசனை நேரடியாக தாக்கிய ஆர்.ஜே.பாலாஜி – இது நியாயமா ப்ரோ?
மகளுடன் தீபாவளியை கொண்டாடிய கமல் ஹாசன்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions