கமல்ஹாசனின் தூங்காவனம் தீபாவளிக்கு வெளியாகிறது

Bookmark and Share

கமல்ஹாசனின் தூங்காவனம் தீபாவளிக்கு வெளியாகிறது

கமல்ஹாசன் நடிக்கும் புதிய படம் ‘தூங்காவனம்’. இதில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். இருவரும் ஏற்கனவே ‘மன்மதன் அம்பு’ படத்தில் இணைந்து நடித்தனர்.

இப்போது மீண்டும் இந்த படத்தில் இணைந்துள்ளனர். பிரகாஷ்ராஜ், மதுஷாலினி, ஆஷாசரத், சம்பத், கிஷோர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 


ராஜேஷ் எம்.செல்வா டைரக்டு செய்கிறார். திகில் கதையம்சம் உள்ள படமாக தயாராகிறது. இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடந்தது.

தற்போது படப்பிடிப்பு முடிந்து உள்ளது. படப்பிடிப்பு முடிவடைந்ததையொட்டி, கமல்ஹாசன் கேக் வெட்டினார். 


இதில், படக்குழுவினர் பங்கேற்றனர். அடுத்த கட்டமாக குரல் பதிவு, இசை கோர்ப்பு பணிகள் தொடங்கி உள்ளன. வருகிற தீபாவளிக்கு ‘தூங்காவனம்’ படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர்.

இந்த வருடத்தில் ஏற்கனவே கமல்ஹாசன் நடித்த ‘உத்தம வில்லன்’, ‘பாபநாசம்’ படங்கள் வெளிவந்தன. இப்போது ‘தூங்காவனம்’ படமும் இந்த வருடத்திலேயே வெளிவருகிறது.


Post your comment





Related News
ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவை சந்தித்த கமலஹாசன்!
தலாய் லாமாவை சந்தித்த கமல்!
என் திறமைக்கு கிடைத்த விருதை திருப்பி கொடுத்து என்ன சாதிப்பீர்கள்? - கமல்
தனது பிறந்தநாளில் எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு மரியாதை செய்த கமல்ஹாசன்!
கமலுக்கு ஜோடி பாகுபலி அவந்திக்கா?
கமல் என்ன சினிமாவுக்கு அல்டிமேட்டா? ராதாரவி ஆவேச பேச்சு!
தூங்காவனத்தை சன் டிவிக்கு விற்ற கமல்!
கமலுக்காக தலதளபதி பட விநியோகஸ்தர்கள் எடுத்த முடிவு
இன்றைக்கும் ரஜினியும் கமலும் சுற்றி இளைஞர்கள் பட்டாளமுள்ளது - பிரகாஷ்ராஜ்
புதிய படத்தில் முறுக்கு மீசையுடன் கமல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions