கமல் படத்தை வெளியிடவில்லை: திருப்பதி பிரதர்ஸ் விளக்கம்

Bookmark and Share

கமல் படத்தை வெளியிடவில்லை: திருப்பதி பிரதர்ஸ் விளக்கம்

கமல் நடிப்பில் இந்த வருடம் ‘உத்தமவில்லன்’, ‘பாபநாசம்’ ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. இதில், ‘பாபநாசம்’ படம் பெரிய வெற்றியடைந்தது. வசூலிலும் சாதனை படைத்தது. ஆனால், ‘உத்தமவில்லன்’ படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. தயாரிப்பாளர்களுக்கு கணிசமான நஷ்டத்தை ஏற்படுத்திக் கொடுத்ததாக கூறப்பட்டது. 

‘உத்தமவில்லன்’ படத்தை ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனமும், ‘ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ நிறுவனமும் இணைந்து தயாரித்திருந்தது.

இந்த படத்தால் ஏற்பட்ட நஷ்டத்திற்கு ஈடுகொடுக்கும் விதமாக கமல் நடிப்பில் தற்போது உருவாகிவரும் ‘தூங்காவனம்’ படத்தின் வெளியீட்டு உரிமையை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்கு கொடுத்திருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளிவந்தன. 

ஆனால், இந்த செய்தியை ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனம் மறுத்துள்ளது. ‘தூங்கவனம்’ படத்தை வெளியிடுவதாக வந்த செய்தியில் உண்மையில்லை என்றும். இதுபோன்ற தவறான செய்தியை பரப்ப வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது. 

மேலும், திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சார்பில் ‘ஜிகினா’, ‘இடம் பொருள் ஏவல்’, ‘ரஜினிமுருகன்’ ஆகிய படங்கள் மட்டுமே வெளிவர தயாராக உள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.


Post your comment





Related News
ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவை சந்தித்த கமலஹாசன்!
தலாய் லாமாவை சந்தித்த கமல்!
என் திறமைக்கு கிடைத்த விருதை திருப்பி கொடுத்து என்ன சாதிப்பீர்கள்? - கமல்
தனது பிறந்தநாளில் எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு மரியாதை செய்த கமல்ஹாசன்!
கமலுக்கு ஜோடி பாகுபலி அவந்திக்கா?
கமல் என்ன சினிமாவுக்கு அல்டிமேட்டா? ராதாரவி ஆவேச பேச்சு!
தூங்காவனத்தை சன் டிவிக்கு விற்ற கமல்!
கமலுக்காக தலதளபதி பட விநியோகஸ்தர்கள் எடுத்த முடிவு
இன்றைக்கும் ரஜினியும் கமலும் சுற்றி இளைஞர்கள் பட்டாளமுள்ளது - பிரகாஷ்ராஜ்
புதிய படத்தில் முறுக்கு மீசையுடன் கமல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions